சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்களை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.இத்தகவல், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் இன்று கோயம்பேடு சந்தையில் மண்டல சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள், உணவு ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை ஆய்வு செய்தனர். கோயம்பேடு சந்தையில், 67 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 34 கடைகளில் ரசாயன கற்கள் பயன்படுத்தி சுமார் 11.50 டன் மாம்பழங்கள் பழுக்க வைத்துள்ளதை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். அதுபோல், ரசாயன கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ பப்பாளி பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்திய 650 கிலோ ரசாயன கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் 4 குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டதில், சுமார் 15 கிலோ ரசாயன கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களும், பப்பாளி பழங்களும் புளியந்தோப்பு குப்பை மாற்று நிலையத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரசாயன கற்களை பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்களை உண்டால் புற்றுநோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வாந்தி, பேதி, அஜீரணக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுவதால் அத்தகைய பழங்களை பொதுமக்கள் உண்ண வேண்டாம் என்றும், ரசாயனக் கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக