விருத்த சேதனம் செய்கின்ற பாரம்பரியம் மிக நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இவர்களின் இப்பாரம்பரியம் மிகவும் கொடூரமானது. பயங்கரமானது. சுமார் 200 மில்லியன் சிறுமிகள் கத்தியின் வலியை தாங்குகின்றனர். 150 மில்லியன் வரையான சிறுமிகள் பிறப்புறுப்புச் சிதைவு என்கிற நோய்க்கு ஆளாகின்றனர்.
விருத்த சேதனம் செய்கின்றபோது ஆபிரிக்க நாடுகளில் மயக்க மருந்துகள், வலி நிவாரணிகள் சிறுமிகளுக்கு வழங்கப்படுகின்றமை கிடையாது. விருத்த சேதனம் செய்கின்றமைக்கு அதி நவீன கருவியாக சாதாரண சவர அலகுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.
சோமாலியாவில் ஒரு பாரம்பரியம் இருந்து வருகின்றது. பிறப்பு உறுப்பின் மன்மதபீடம் மற்றும் இதழ்கள் ஆகியன நீக்கப்படாத பெண்கள் இங்கு திருமணம் செய்ய முடியாது. மாறாக பாவப்பட்டவர்களாக, அசுத்தமானவர்களாக நடத்தப்படுவார்கள். சிறுமிகள் வரிசையாக படுக்கப்பட்டு விருத்த சேதனம் செய்யப்படுவர். இது ஒரு பெரிய சடங்காகவே நடக்கும்.
சோமாலியாவில் நாடோடிக் குடும்பங்களைப் பொறுத்த வரை சிறுமிகளுக்கு விருத்த சேதனம் செய்கின்றமை என்பது மிகவும் செலவானது. ஆனால் இச்செலவை சிறந்த மூலதனமாகவே நாடோடிக் குடும்பங்கள் கொள்கின்றன. ஏனெனில் இச்சடங்கை செய்யாவிட்டால் வருங்காலத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாது.
சிறுமிகளுக்கு தாய்மார் சடங்கின் முக்கியத்துவம் குறித்து உபதேசம் செய்வார்கள் . ஆனால் இச்சடங்கின் கொடூரத்தை உண்மையில் சொல்ல மாட்டார்கள். எனவே சிறுமிகள் எப்போது இச்சடங்கு இடம்பெறும்? என்று ஆவலோடு காத்திருப்பார்கள். அநுபவிக்கின்றபோதுதான் கொடூரம் புரியும்.
உகண்டாவில் இச்சடங்கு டிசம்பர் மாதம் நடத்தப்படுகின்றது. இதனால் டிசம்பர் மாதத்தை பேரழிவு மாதம் என்று விபரம் தெரிந்த பெண்கள் இங்கு பேசிக் கொள்வார்கள். இச்சடங்கை இரத்தக் களரி என்று படித்த பெண்கள் சொல்லிக் கொள்வார்கள். அநுபவப்பட்டவர்கள் அதிபயங்கரமான வேதனை என்று வர்ணிப்பார்கள்.
குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு இச்சடங்கு மகிழ்ச்சியானதுதான். கூடிக் கொண்டாடுகின்றனர்.
மன்மத பீடம், இதழ்கள் ஆகியவற்றை அறுக்கின்றனர். யோனியின் மேற்பகுதியை நூலால் தைத்து விடுகின்றனர்.சிறிய ஒரு துவாரத்தை மாத்திரம் விட்டு வைக்கின்றனர். உகண்டாவில் இச்செயற்பாடுகளுக்காக சவர அலகுகளை விட கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் உட்பட வேறு ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
பாலியல் பரவச நிலையை பெண் உணரக் கூடாது என்பதற்காகவே ஆபிரிக்க நாடுகளில் இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. பாலியல் பரவச நிலையை உணர முடியாத பட்சத்தில் கணவனுக்கு பெண் விசுவாசமாக இருப்பாள் என்று நம்புகின்றனர்.
ஆனால் கிருமி நீக்கப்படாத கருவிகளைப் பயன்படுத்தி இச்சடங்கை செய்கின்றமையால் டெடனஸ், யோனி வீக்கம், சூதக வலி, ஒவ்வொரு திராட்சைப் பழம் அளவில் நீர்க் கட்டிகள் ....... போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். பாலியல் மீதான விருப்பம் பாதிக்கப்படக் கூடும். உடலுறவின்போது வலி ஏற்படலாம். சலக் கடுப்பு ஏற்படலாம், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரலாம். பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படலாம், பிரசவத்தில் தாய் மற்றும் சேய் மரணங்கள் நேரலாம். செப்டிகேமியாகூட ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக