ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரிட்டனில் முதன்முறையாக பிளாஸ்டிக் இருதயம்



பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்டு ஒருவர் முதன் முறையாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதான மத்தியூ கிறீன் என்பவருக்கே செயற்கை இருதயம் வெற்றிகரமாக பொருத்தி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.



அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு உடனடியாக மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையை உணர்ந்தனர்.

உடனடியாக அவருக்கு பொருத்தமான மாற்று இருதயம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தினர். அதற்கான அறுவைச்சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடந்தது.

அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததால் அவர் தற்போது செயற்கை இருதயத்துடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவர் ஸ்டீவன் சூய் கூறியுள்ளார்.
தான் இப்போது நன்றாக உணர்வதாக தெரிவித்துள்ளார் மத்தியூ கிறீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக