நோர்வே குண்டுத்தாக்குதலுக்குக் காரணமான அன்டேர்ஸ் பிறீவிக் இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது தன்னிடம் இன்னும் இரு இடங்களில் தாக்கும் திட்டம் உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
32 வயது பிறீவிக் தானே இந்தத் தாக்குதலைச் செய்ததாக ஒப்புக்கொண்டிருந்தாலும் தான் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று மறுத்துக்கூறினான்.
தான்
மக்களைக் கொல்லமுற்படவில்லையென்றும் முஸ்லிம்களதும் மாக்சியவாதிகளதும் ஊடுருவலை நிறுத்துவதற்கான சமிக்கையை மக்களுக்குக் கொடுப்பதற்காகவே இவ்வாறு செய்ததாகக் கூறினான்.பிறீவிக் நீதிமன்றத்திற்குக் காவற்றுறைப் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டபோது அதனைச் சூழ மக்கள் குழுமி நின்று ‘துரோகி’ என்று கத்தியதுடன் கார்களையும் தாக்கினர்.
இதனால் அக்கட்டடத்தின் எட்டாவது மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டான். தொடர்ந்து பிறீவிக்கின் வழக்கு 35 நிமிடங்களே நீடிக்கப்பட்டது.
நீதிபதி கிம் ஹெஜர் எட்டு வாரங்களுக்கு பிறீவிக் தடுப்பில் வைக்கப்படவேண்டும் என்றும் ஒரு மாதம் தனியாகத் தடுத்துவைக்கப்படவேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.
எதிர்த்தரப்பு சட்டத்தரணி கேட்டதற்கிணங்க அவருக்கு எவரும் கடிதங்கள் கொடுக்கவோ யாரையும் பார்க்கவோ அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
பிறீவிக் மிகவும் ஒத்துழைப்புத் தந்ததாகவும் தான் தனித்துத்தான் செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தான். வேறு யாரும் இதில் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதை விசாரணை செய்பவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
தனது நடவடிக்கைகளை விளக்கிக்கூறக் கூடியவாறு தன்னைப் பேசவிடுமாறு பிறீவிக் கேட்டுக் கொண்டதுடன் தான் சீருடை அணிவதற்கும் அனுமதி கேட்டான்.
ஆனால் இவ்விரு வேண்டுகோள்களுமே மறுக்கப்பட்டாலும் அவன் முன்பே தயாரித்து வைத்திருந்த கூற்றுக்களைச் சில நிமிடங்கள் வாசிக்க நீதிபதி அனுமதியளித்தார்.
‘இன்னும் இரு இடங்கள் எமது அமைப்பில் உள்ளன என்ற கூற்றுக்கிணங்க அக்குற்றவாளி மேலும் விசாரிக்கப்பட வேண்டும். இவனை விடுவித்தால் எல்லாவற்றையும் குழப்பிவிடக்கூடிய ஆபத்தும் ஏற்பட்டுவிடும். வழக்கிலுள்ள தகவல்களின் அடிப்படையில் இன்றைய விசாரணையினை மூடிய கதவுக்குள் தான் நடத்தவேண்டியிருந்தது,’ என நீதிபதி தெரிவித்தார்.
இன்று மதியமளவில், தாங்கள் உட்டோயா தாக்குதலில் இறப்பின் தொகையைப் பிழையாக எண்ணிவிட்டதாகவும் 86 இலிருந்து 68ஆக இது குறைந்துள்ளதாகவும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.
இதனால் மொத்த இறப்பின் அளவும் 93 இலிருந்து 76 ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறு குறைந்தாலும் சமாதான காலத்தில் நடைபெற்ற நவீனப் படுகொலையாகவே இது உள்ளதென்பதை மறுக்கமுடியாது.
அமைதியான, சுதந்திரமான நாடான நோர்வே, தலைநகர் ஒஸ்லோவில் நடந்த குண்டுத்தாக்குதலாலும் தலைநகரிற்கு வெளியே இளையோர் முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தாலும் அதிர்ந்து போயிருந்தது.
இதற்குக் காரணமான குற்றவாளியோ, முஸ்லிம்களையும் ஏனைய குடியேறிகளையும் தங்களது நாட்டிலிருந்து அகற்றுவதற்காக நோர்வேவாசிகளைத் தூண்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கையே இதுவெனத் தனது குற்றத்திற்குக் காரணம் கற்பித்தான்.
நோர்வே மக்களின் பண்பாட்டின் மீது பல்கலாச்சாரத் தன்மை திணிக்கப்பட்டுள்ளதையிட்டு அவன் அந்நாட்டுவாசிகளையே குற்றஞ்சாட்டினான்.
பிறீவிக்கின் தடுப்புக் காலம், குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள முன்பு நீட்டிக்கப்படும் என்றும் அவ்விசாரணை இன்னும் ஒரு வருடத்தின் பின்னரே நடக்குமென்றும் காவற்றுறை கூறியது.
இத்தீர்ப்பினால் அவனுக்கு விடுதலையளிக்கப்பட்டு விடுமோ என்ற வாதம் மக்களிடையே எழுந்ததால் நோர்வேயினையே உலுப்பிய இந்த மனிதனை வெளியே விடக்கூடாதெனப் பலர் கிளர்ந்தெழுந்தனர்.
தான் எதிர்பார்க்கும் புகழை பிறீவிக் அடையக்கூடாதென்பதற்காக ‘Shut The Doors On Monday’ எனும் பேஸ்புக் பக்கத்தில் 60,000 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டனர். இவ்வாறு பலவிதத்தில் எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணமிருந்தன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிறீவிக் 21 வருடம் தொடர்ச்சியான சிறைத்தண்டனையைப் பெறுவான். இதுவே நோர்வேயின் சட்ட அமைப்பிலுள்ள நீண்டகாலத் தண்டனையாகும்.
இங்கிலாந்திலும் வேல்சிலும் தொடர்கொலைகாரர்களாயின் அவர்கள் சிறைக்குள்ளேயே இறக்கவேண்டி வருமெனக் கூறப்படுவர். கத்தி அல்லது துப்பாக்கித் தாக்குதல் குற்றங்களாயின் அவர்கள் 25 அல்லது 30 வருடங்கள் சிறையிலிடப்படுவர்.
நோர்வேயில் ஒருசில கொலைகாரர்களுக்குத் தான் 14 வருடத்திற்கும் மேலாகத் தண்டனை கிடைக்கின்றது.
ஆகக்கூடிய காலம் தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் கூட அவர்களின் தண்டனைக் காலத்தில் மூன்றில் இருபங்கு காலத்திலேயே விடுவிக்கப்படலாம். அத்துடன் சிலர் மூன்றில் ஒரு பங்கு காலப்பகுதியின் பின்னர் காவலின்றியே வாரவிடுமுறை நாட்களில் வீட்டிற்குச் சென்றுவரக்கூடிய நிலைகூட உள்ளது.
ஆகக்கூடிய காலம் தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் கூட அவர்களின் தண்டனைக் காலத்தில் மூன்றில் இருபங்கு காலத்திலேயே விடுவிக்கப்படலாம். அத்துடன் சிலர் மூன்றில் ஒரு பங்கு காலப்பகுதியின் பின்னர் காவலின்றியே வாரவிடுமுறை நாட்களில் வீட்டிற்குச் சென்றுவரக்கூடிய நிலைகூட உள்ளது.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களில்தான் அதுவும் ஒரு கைதி மிக அபாயமிக்கவனாகக் கருதப்படுவானாயின் அவனது தண்டனை இன்னும் 5 வருடங்களால் அதிகரிக்கப்படும்.
ஐரோப்பாவிற்குள்ளேயே குற்றவாளிகளைத் தடுத்துவைக்கும் காலங்களில் குறைவான காலங்களைக் கொண்ட நாடாக நோர்வேயே உள்ளது. ஒவ்வொரு 100,000 பேருக்கும் 66 பேர்ப்படி இங்கு சிறையில் உள்ளனர். இது பிரித்தானியாவின் பங்கில் அரைப்பங்காகும்.
இங்கிலாந்திலும் வேல்சிலும் 10 வயதிலேயே குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் அதேவேளை இங்கு 15 வயதில்தான் குற்றத்திற்குத் தண்டனை வழங்குகின்றனர்.
சிறைகள் போதாமை காரணமாக சில குற்றவாளிகள் வாரக்கணக்காக அல்லது மாதக்கணக்காகக் காத்திருந்துதான் சிறைக்குள் செல்லவேண்டிய நிலையும் இங்கு இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக