ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் அரிசோனா பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இத்திட்டமானது சூழலை பாதிக்காத, செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ள நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக