ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக அரசு தொடங்கவிருக்கும் கேபிள் டி.வி க்கு தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் தங்களது ஒளிபரப்பு சேவையை இலவசமாக தர ஒப்புதல் தெரிவித்துள்ளன


அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த ஆட்சி மாற்றத்தால் அது பாதியிலேயே முடங்கியது. மீண்டும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் அரசு கேபிள் டி.வி.க்கு புத்துயிர் ஊட்ட உத்தரவிட்டார். இதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். “அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்” தலைவராக கேபிள் தொழிலில் அனுபவம் உள்ள கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களையும் அழைத்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேபிள் டி.வி. செயல்பாடுகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரத்தில் கட்டண சேனல்களுக்கு தமிழக அரசு காலக் கெடுவையும் விதித்துள்ளது.
மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த இறுதி கெடு விடுவிக்கப் பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு கேபிள் ஆபரேட்டர்களுக்கும் தனியார் டி.வி. சேனல்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ராஜ் டி.வி., இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ டி.வி. உள்ளிட்ட பெரும்பாலான தனியார் டி.வி. சேனல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் ஒரே ஒரு டி.வி. சேனல் பிடியில் கேபிள் டி.வி. தொழில் இருந்து வருகிறது. சர்வாதிகார நிலையை தடுக்கவே, அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டுள்ளது. சில சேனல்கள் சென்னையில் இலவச சேனலாகவும் பிற மாவட்டங்களில் கட்டண சேனல்களாகவும் உள்ளன. வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையை தவிர்த்து மாநிலம் முழுவதும் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட வேண்டும். அரசு கேபிள் டி.வி.க்கு அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவையை வழங்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து சந்தா எதுவும் வசூலிக்க கூடாது. அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடுவாகும். விருப்பம் இல்லாதவர்கள் சேனல் தொகுப்பில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம்.அரசு கேபிளை சேதப்படுத்தியவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டப் படும் என்று கூறினார்.
இதை தொடர்ந்து இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பாலான தனியார் சேனல்கள் அரசு கேபிள் டி.வி.க்கு இலவசமாக ஒளிபரப்பு உரிமையை வழங்க ஒப்புக் கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக