ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்மாவிற்கு ஓட்டு போட்டு பல்லித்தவர்களே படுங்கள் கஷ்டம்

புதுடெல்லி, ஜூலை.28 சமச்சீர் கல்வி பிரச்சினையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த கல்வியாண்டில் இருந்தே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வியை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதை எதிர்த்தும், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சாலி, தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. முதல் 2 நாளும் தமிழக அரசின் சார்பில் வக்கீல் பி.பி.ராவ் வாதாடினார்.

இன்று 3-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது மாணவர்- பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் அர்ஜுனாவாதாடியதாவது., சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்தது தேவையற்றது. தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி கட்டி போடப்பட்டுள்ளது., அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

முந்தைய தி.மு.க. அரசு நிபுணர்களின் கருத்தை கேட்ட பிறகே சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. தி.மு.க. அரசு கொண்டு வந்ததாலேயே சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கரணமாக அ.தி.மு.க. அரசு எடுத்த இந்த முடிவால் மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் முன்பு நிபுணர்களின் கருத்தை அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை., இவ்வாறு அவர் வாதாடினார்.

*பள்ளிகள் திறந்து பல நாட்கள் ஆகியும் பாடங்கள் துவங்கவில்லை இவர் என்ன எதிர்பார்கிறார்?, சசிகலாவுடன் கோடா நாடு செல்ல வேண்டியதுதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக