ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வருவாயில் அதிகரிக்கும் தாஜ்மகால்



taj-mahal-35ஆக்ராவில் அமைந்துள்ள, உலகின் பிரபல்யம் பெற்ற காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மகால், கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2008-2009ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-2010ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-2011ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-2011ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக