ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரான்சில் பர்தா அணியத் தடை : பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் மத்திய கிழக்கு சுற்றுலாப் பயணிகள்



article-2018797-0C07C82200000578-451_468x350பிரான்சில் கொண்டுவரப்பட்ட பர்தா தடையினால் பரிசிற்குச் செல்வதைத் தவிர்க்கும் மத்தியகிழக்கு சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவிற்குப் படையெடுக்கின்றனர். இதனால் பிரான்சின் கடைகளில் விற்கப்படாமலுள்ள பர்தாக்களைப் பிரித்தானியக் கடைகள் வாங்கத்தொடங்கியுள்ளன.
நிக்கலஸ் சர்கோசியின் அரசு ஏப்ரலில் பர்தாக்கள் அணிவதற்கு தடைவிதித்ததால் லண்டன் கடைகளே இலாபமடைகின்றன.

வெஸ்ற் என்ட் (West End)  களஞ்சியமான ‘Liberty’  இல் சர்வதேசப் பயணிகளின் வருகை 45 வீதமாக அதிகரித்துள்ளது. ‘Selfidges’ எனும் களஞ்சியத்தில் இது 40 வீதத்தால் அதிகரித்துள்ளது.
பிரான்சைவிடத் தாங்கள் பிரித்தானியாவில் நன்றாக நடத்தப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். பிரான்சில் வெளியிடங்களில் பர்தா அணிந்தால் 150 யூரோ தண்டனையாகச் செலுத்தப்படவேண்டும்.
மத்தியகிழக்குப் பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 1,800 பவுண்களை பொருட்கள் வாங்கச் செலவழிக்கும் அதேவேளை ஒரு சராசரி பிரித்தானியர் 120 பவுண்களையே செலவழிக்கின்றார்.
யூலை பிற்பகுதியில் மத்திய கிழக்கத்தியரின் வருகை பெருமளவில் இருக்குமென்பதால் விற்பனை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரம்ழானிற்கு முன்வரும் காலமாதலால் விற்பனைகள் 200 மில்லியன் பவுண்வரை அதிகரிக்கலாமெனவும் கூறப்படுகின்றது.
அடுத்த வருடம் ஒலிம்பிக் இருப்பதும் பவுணின் பணவீக்கமும் இந்த விற்பனையை மேற்கொள்ளப் பிரித்தானியக் கடைகளைத் தூண்டியுள்ளன.
ஐக்கிய அரபு எமிறேற்றும் சவுதி அரேபியாவும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளும் தெரிவுசெய்து வாங்கக்கூடிய நல்ல பொருட்களை விற்குகின்ற ‘நியூ வெஸ்ற் என்ட்’ நிறுவனத்திற்கு மிக முக்கியமானவர்களாக உள்ளார்களென அதன் விளம்பரதாரியான ஜேஸ் ரைறல் கூறினார்.
‘பர்தா’ தடையையிட்டு சில வகையான எதிர்ப்புகள் இருந்தாலும் லண்டனில் இவர்கள் பிரச்சினையின்றியே உள்ளனர். பலர் பெய்ரூட், சிரியா மற்றும் வேறு வட ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பலர் செல்வது வழமையென்றாலும் தற்போது லண்டனையே அவர்கள் தெரிவு செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக