பிரித்தானியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் இரசாயனப் பொருட்களை உட்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஏழு மாத கர்ப்பிணியான குறித்த பெண் தளபாடங்களை சுத்திகரிப்பதற்காகவும், அழகு படுத்துவதற்காகவும் பயன்படுத்தும் இரசாயனங்களை அதிகளவில் உட்கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்த விசித்திரமான உணவுப் பழக்கம் வயிற்றில்
இருக்கும் சிசுவை பெரிதும் பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பெர்மிங்ஹாமைச் சேர்ந்த 26 வயதான எமா வென்னிஸ் என்ற கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு விசித்திரமான உணவுப் பழக்கத்தை கொண்டுள்ளார். இந்த ஆபத்தான உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஒவ்வொரு நாளும் உறுதி பூணுவதாகவும், எனினும், அடக்க முடியாது ஆவலினால் மீண்டும் மீண்டும் இரசயானங்களை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தளவாடங்களை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தும் பூச்சுக்கள் உள்ளிட்ட இரசயானங்களை நேரடியாக உட்கொள்ளும் பழகக்த்தை கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. கருவுற்று சில மாதங்களின் பின்னர் இந்த விசித்திர ஆசை எழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எமாவின் தாயாரும், அவரது தயாரும் கர்ப்பக் காலத்தில் நிலக்கரியை உட்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.நள்ளிரவில் சில நேரங்களில் இரசாயனப் பொருட்களை உட்கொள்ள வேண்டிய உணர்வு தோன்றும் எனவும் உடனடியாக சென்று தளபாட சுத்திகரிப்பு பொருட்களை உட்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உணவுப் பழக்கம் ஆபத்தானது எனவும் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக