ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரான்ஸ் செய்தி
பிரான்சில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடிச் செல்லும் பர்தா அணியக் கூடாது என பிரான்ஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தத் தடையை எதிர்த்து ஒரு பெண் பர்தா அணிந்து வந்தார். அவரை பொலிசார் கைது செய்தனர்.
தலைநகர் பாரிஸ் நோட்ரேடேம் கதீட்ரல் பகுதியில் அந்தப் பெண் எதிர்ப்பை காட்டும் வகையில் பர்தாவுடன் நின்றார். இந்த எதிர்ப்பு போராட்டத்தில் 12க்கும் மேற்பட்ட நபர்களும் கலந்து கொண்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெரியவில்லை. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேர் பெண்கள் ஆவார்கள். அவர்கள் கண்கள் மட்டுமே தெரியும் வகையில் ஆடை அணிந்து இருந்தார்கள்.
அனுமதி இல்லாமல் எதிர்ப்பு போராட்டத்தை பொதுமக்கள் பகுதியில் அவர்கள் நடத்தியதற்கு பொலிசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கீகாரம் இல்லாத போராட்டம் தொடர்பாக 2 பெண்களை பிடித்து வைத்துள்ளோம் என ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார்.
பர்தா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள புதியச் சட்டப்படி பொது இடத்தில் ஆணோ அல்லது பெண்ணோ தங்களது முகத்தை மூடி நடந்து சென்றால் 150 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பர்தாவை அகற்றும் உரிமை பொலிசாருக்கு இல்லை.
பர்தாவை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தும் இதர நபர்களுக்கு 30 ஆயிரம் யூரோ அபராதம் மற்றும் ஒரு ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக