லிபியாவில் நிலவும் உள்நாட்டு போராட்டத்திற்கு தீர்வு காண முயற்சிக்கும் சர்வதேச பிரதிநிதிக் குழு கத்தாரில் இன்று கூடுகிறது.
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக கடாபி சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக புரட்சி போராட்டம் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. லிபிய பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பும் சர்வதேச பிரதிநிதிக் குழு கத்தாரில் கூடுகிறது. இந்தக்குழு லிபியா புரட்சி போராட்டத் தலைவர்களை சந்தித்து பேசுகிறது. லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அயல்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு நேட்டோ ஜெனரல் கூறுகையில்,"லிபியாவில் தங்களது துருப்புகள் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர்" என கூறினார். லிபியாவில் புரட்சியாளர்கள் வசம் இருந்த மிஸ்ரட்டா நகரில் மனித உரிமை மீறல் கடுமையாக உள்ளது. அங்கு கடாபி துருப்புகள் புதிய தாக்குதல்களை தொடர்ந்துள்ளன.
மிஸ்ரட்டா நகரில் உணவுத் தட்டுப்பாடு காணப்படுகிறது. மருந்துப்பொருட்களும் போதிய அளவு இல்லை. இதனால் அங்கு வசிப்பவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மனித உரிமை மீறப்படுகிறது என மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ளது.
லிபிய பிரச்சனை: தீர்வுக்குழு கத்தாரில் இன்று கூடுகிறது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக