ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழக சட்டசபை தேர்தல்: அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 5 மணிவரை வரிசையில் நின்ற வாக்காளர்கள் தொடர்ந்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது. அந்த இடங்களில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக