வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை நேற்று இரவோடு இரவாகப் படையினர் முற்றாக இடித்து அழித்துள்ளனர்.
நேற்றிரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை இடிபாடுகளை அகற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அவ்வீட்டினை பலதடவைகள் படையினரும் இனவாதக்காரர்களும் கட்டம்கட்டமாக சிதைத்து வந்திருக்கும் நிலையில் தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து நேற்றிரவு மேற்படி வீடானது, இராணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் இயக்கப் போராளிகளது மாவீரர் துயிலுமில்லங்களையும் நினைவுத்தூபிகளையும் கட்டம் கட்டமாக அழித்துள்ள இலங்கை அரசு தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது வீட்டையும் முற்றாக அழித்துள்ளனர்.
முல்லைத்தீவில் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பங்கரை சிங்களச் சுற்றுலாப் பயணிகளுக்கான மையமாக இராணுவம் மாற்றி உள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக