நிதி தொடர்பான ஏற்பாடுகளில் நீண்டகாலமாக இருந்துவரும் பல்வேறு இழுபறிகள் காரணமாக இரண்டு நாடுகளின் பொருளாதாரங்களும் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
சூடானின் புதிய நாணயத் தாள்கள் வங்கிகளிலும் நாடு முழுவதிலுமுள்ள எல்லா நாணய மாற்று முகவர்களிடமும் கிடைக்கும் என்று அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பழைய நாணயத் தாள்களை மூன்று மாத காலத்துக்குள் புதிய நாணயத்துக்கு மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ள மத்திய வங்கி, தெற்கு சூடான் ஏற்கனவே புதிய நாணயத்தை புழக்கத்தில் கொண்டுவந்துள்ள நிலையில், சூடான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதனைக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
'கரண்சி போர்'
தெற்கு சூடானில், சுமார் இரண்டு பில்லியன் வரையான சூடானிய பவுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் அது சூடானின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியது எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது
‘கரண்சி போர்’ அதாவது நாணயங்களுக்கிடையிலான யுத்தமொன்று அவசியமில்லையென்ற போதிலும் அதுவே நடந்து கொண்டிருப்பதாக சூடானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஒத்துழைப்பு போக்கு இருக்காவிட்டால், இரண்டு பொருளாதாரங்களும் கடு்ம் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜூபா மற்றும் கார்ட்டூமில் இருக்கின்ற இரண்டு அரசுகளும் எண்ணெய் வளம் தொடர்பில் உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டிய நிலையில் இருக்கின்றன.
எண்ணெய் வளத்தில் பெரும்பாலானவை தெற்கு சூடானிலேயே இருக்கின்றன. ஆனால் அவற்றை அகழ்ந்து ஏற்றுமதி செய்யும் தொழிநுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் சூடானிலேயே இருக்கின்றன.
இந்த வசதிகளைப் பயன்படுத்த தெற்கு சூடான் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விடயத்திலேயே இரு தரப்புக்கும் இணங்க முடியாமல் இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக