ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனாவில் முகமூடிச் சிறுவன்!



சீனாவின் பீஜிங் நகரத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுவன் Wang Gengxiang. இவர் கடந்த நவம்பர் மாதம் பாரிய தீ விபத்து ஒன்றில் சிக்கி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார். ஆனால் முகம், கைகள், வயிறு போன்ற உறுப்புக்களில் ஏராளமான தீக்காயங்கள். இவர் அடுத்த பத்து ஆண்டுகள் வரையேனும் அணிகின்றமைக்காக வைத்திய நிபுணர்கள் பிரத்தியேக முகமூடிகளைக் கொடுத்து உள்ளார்கள்.


விபத்தில் இவரது மூச்சுக் குழாயும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதனால் தோலொட்டு சத்திர சிகிச்சையை இவருக்கு தற்போது மேற்கொள்ள முடியாது, இவர் 15 - 19 வயதை அடையும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது என இந்நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.



அது வரை காலமும் முகமூடி அணிந்து இருக்க வேண்டும். இவரது காயங்கள் ஊடாக கிருமிகள், தூசிகள் உட்செல்லாமல் இம்முகமூடிகள் பாதுகாக்கும். அத்துடன் இவரின் விகாரமான தோற்றத்தையும் மறைக்கும்.



இவரின் விகாரமான தோற்றத்தை கண்ட அயல் சிறுவர்கள் விளையாட்டுகளில் சேர்க்க மறுக்கின்றார்கள்.









  முகப்பு
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக