வாஷிங்டன் :இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் (45) எழுதிய சூப்பர்ஹிட் நாவல் ‘ஹாரிபாட்டர்’. கதையின் நாயகன் ஹாரிபாட்டர் மற்றும் அவனது இளம் தோழர்கள் சேர்ந்து செய்யும் மாயாஜால சாகசங்களின்
அடிப்படையிலான கதை. 1997-ல் தொடங்கி 2007 வரை 7 பாகங்களாக புத்தகங்கள் வெளியாயின. உலகம் முழுக்க 67 மொழிகளில் அச்சாயின. கடந்த மாத கணக்குப்படி மொத்தம் 45 கோடி பிரதிகள் விற்று அபார சாதனை படைத்த புத்தகம்.
முதல் புத்தகத்தை அடிப்படையாக கொண்ட படம் 2001-ல் வெளியானது. 6 பாகங்களும் சினிமாவாகி சூப்பர்ஹிட்டாக ஓடின. 7-வது பாகமான ‘ஹாரிபாட்டர் அண்ட் த டெத்லி ஹேலோஸ்’ நீளமானது என்பதால் 2 சினிமாவாக எடுக்கப்பட்டது. முதல் பகுதி கடந்த நவம்பரில் வந்தது. பார்ட்-2 கடந்த 13-ம் தேதி ரிலீசானது. இதிலும் டேனியல் ரேட்கிளைப், எம்மா வாட்சன் அண்ட் கோ நடித்திருந்தது. ஹாரிபாட்டர் வரிசை கடைசி படமான இதுவும் வசூலை குவித்து வருகிறது.
ஹாரிபாட்டர் வரிசை படங்கள் எல்லாமே லண்டன் ஸ்டுடியோவில்தான் எடுக்கப்பட்டன. படத்துக்கான செட்களை அகற்ற விரும்பாத வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் இதை மியூசியமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
மின்னஞ்சல் |
0
0
0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக