ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இசைராஜா - 68


இசையால் உடல் சிலிர்க்கும் அனுபவத்தை உருவாக்கியவர் இளையராஜா.கிராமத்து இசையிலிருந்து சிம்பொனி என்ற மேல்நாட்டு இசைவரை சென்று சிகரம் தொட்டவர்.
ஜூன் 2 இளையராஜா பிறந்த நாள் என்ற தவறான தகவல் உண்டு. உண்மையில் அவரது பிறந்த தினம் ஜூன் 3ம் தேதிதான். இளையராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை பற்றிய 68 தகவல்கள்.
1. இளையராஜாவுக்கு இன்று 68 வது பிறந்தநாள்
2. 1943ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் பிறந்தவர்

3. இயற்பெயர் ராசய்யா.
4. தேனிமாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்தவர்
5. தந்தைபெயர் ராமசாமி,தாயார் பெயர் சின்னாத்தாயம்மாள்.
6. இவருடன் பிறந்தவர்கள் பாவலர் வரதராஜன், டேனியல்பாஸ்கர், அமர்சிங்(கங்கைஅமரன்)
7. 1976ல் அன்னக்கிளி படம் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமானார்
8. அன்னக்கிளி படத்தில் எஸ்.ஜானகி ''பாடிய மச்சானை பார்த்திங்களா'' பாடல் பிரபலமானது
9. இளையராஜாவின் வரவுக்குப் பிறகு புதிய பாடல்கள் என்றும் பழைய பாடல்கள் என்றும் திரைப்பாடல்கள் தரம் பிரிக்கப்பட்டது.
10. தமிழ்,தெழுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார்
11. 2010ம் ஆண்டுக்கான பத்மபூசண் விருதினை பெற்றுள்ளார்.
12. பாடல்கள்பாடுவது, கிட்டார்,கீபோர்ட்,ஆர்மோனியம்,பியானோ போன்ற இசைகருவிகளை வாசிப்பதில் வல்லவர்.
13. லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் தங்கபதக்கம் பெற்றவர்.
14. திரைதுறைக்கு வருவதற்கு முன்னாள் இந்தியாவெங்கும் சென்று நாடகங்களுக்கு இசையமைத்தவர்.
15. ''பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசையை உருவாக்கியுள்ளார்.
16. ""How to name it", "Nothing But Wind",ராஜாவின் ரமணமாலை,கீதாஞ்சலி,முகாம்பிகை போன்ற இசை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
17. ஆதிசங்கரர் எழுதிய மினாட்சி ஸ்தேத்திரம், மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கும் இசையமைத்துள்ளார்.
18. 4500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
19. 900க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னனி இசையமைத்துள்ளார்.
20. சிம்பொனி இசையமைத்த ஆசியகண்டத்தின் முதல் இசையமைப்பாளர்(1993)
21.தமிழக அரசின் கலைமாமணி விருது,மத்தியபிரதேச அரசின் லாதாமங்கேஷ்கர் விருது(1988), கேரளஅரசின் விருது(1993) பெற்றவர்.
22.அண்ணாமலை பல்கலைகழகம், மதுரைகாமராசர் பல்கலைகழகத்திலும் இசைசாதனைக்காக டாக்டர் பட்டம் பெற்றவர்.
23. சாகரசங்கமம்(தெலுங்கு 1985),சிந்துபைரவி(தமிழ் 1987),ருத்ரவிணை(தெலுங்கு 1989),பழஸிராஜா(மலையாளம்,2009) என நான்குபடங்களுக்கு தேசியவிருது பெற்றவர்.
24. புகைபடங்கள் எடுப்பதிலும்,இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். ஞானகங்கா,என் நரம்பு வீணை போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
25. இளைமைகாலத்தில் கம்யூனிசபாடல்களை பாடிய இளையராஜா தற்போது ஆன்மீகவாதி.
26. சிறுவயது முதல் இணைபிரியாத நட்பு பாரதிராஜா உடன், இடையில் முறிந்து போன நட்பு வைரமுத்துவுடன்.
27. கர்நாடக இசை, நாட்டுபுறஇசை மற்றும் மேற்கத்தியஇசையில் புலமையும் பயிற்சியும் பெற்றவர்.
28. 1969ம்ஆண்டு சினிமாவுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார்.
29. இளையராஜா இசையமைத்த சிம்பொனி இசை இன்னும் வெளியிடப்படவில்லை.
30. இளையராஜா பிறந்த தேதியில் பிறந்த மற்றொரு வி.ஐ.பி. கலைஞர் கருணாநிதி.
31. இளையராஜா இசையமைத்த முதல்படமான அன்னக்கிளி வெளியாகி 35 வருடங்கள் ஆகிறது.
32. சினிமாவுக்கு மட்டுமல்ல கலை இயக்குனர் பிரபாகரன் இயக்கிய ''அம்மா'' என்னும் குறும்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
33. இளையராஜா திருப்பதியில் இசைபல்கலைகழகம் உருவாக்க இருக்கிறார்.
34. இருபது ஆண்டுகளாக உப்பை தனது உணவில் தவிர்த்து வருகிறார்.
35. கவியரசர் கண்ணதாதனின் கடைசி பாடலுக்கு (முன்றாம்பிறை)இசையமைத்தவர்.
36. இளையராஜாவுக்கு ராகதேவன், மேஸ்ட்ரோ, இசைஞானி என பல புனைப்பெயர்கள் உண்டு.
37. செங்காத்து பூமியிலே படம் இளையராஜாவின் 909 வது படம்.
38. திரைஇசைக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவர்.
இளையராஜாவின் கருத்துக்கள்
39. இசை என்பது ஒவ்வொருமுறை கேட்கும் பொழுதும் புதியதாய் தோன்ற வேண்டும்.
40. எனக்கென்று இசை வாரிசுகள் யாருமில்லை, இசைக்கு யாரும் வாரிசாகமுடியாது.
41. நான் என்னுடைய கடமையை.எனக்கு தெரிந்ததைச்செய்கிறேன். அதனால் யார் என்னைப் புகழ்ந்தாலும் அதை நான் பெரிதாக நினைப்பது இல்லை. அதைப்பார்த்துதான் சிலர் என்னை கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்.
42. நிலம் தாழ்ந்ததாக இருப்பதால் நீர் அதன் மீது ஓடுகிறது.எனவே என் மீதுதான் நீர் ஓடுகிறது என்று நிலம் பெருமைப்பட முடியுமா? அது போல இசை,என்னைத் தேர்தெடுத்து என்மீது ஒடுகிறது அவ்வளவுதான். அதற்காக இசை அறிவு என்னிடம் அதிகமாக இருக்கிறது என்று ஆர்த்தம் அல்ல.
43. சிறந்த இசைக்கு வார்த்தைகளின் துணை தேவையில்லை.
44. அழகர்சாமியின் குதிரை படத்தின் இசை ஒரு புதிய அனுபவத்தை தரும் . இந்த இசையைக்கேட்டு ஒரு சொட்டு கண்ணீர் விடாவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன். இளையராஜா.
45. கதை நல்லா இருந்த இசைதானா வந்திடும்.
46. சிம்பொனி இசையமைக்க சில விநாடி நேரம் போதும். ஆனால் இப்போதுள்ள பைரஸி,டவுன்லோடிங் போன்ற சமாச்சாரங்கள் இசையமைக்கும் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டாக உள்ளளன.
47. சினிமாவில் புது டைரக்டர்களை ஊக்குவிப்பதை எனது கடமையாக வைத்துள்ளேன்.
48. சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிபோன விஷயம். இதற்கு தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
49. என்னாலே பேசவே முடியலை இந்தபடத்தை உலகமே கொண்டாட போவுது பாரு.நான் கடவுள் படத்தை பார்த்துவிட்டு இளையராஜா
50. எனக்கு படத்தின் கதை பிடிக்கவிட்டால் என்னையா குப்பை கதையை சொல்றே? என்று நேராகவே கூறிவிடுவேன்51. நான் சென்னைக்கு வந்த புதுசல ரெக்கார்டிங் ரூமுக்கு போறதுக்கே பயமா இருக்கும். ஜவ்வாது மணமணக்க பட்டு வேட்டி சட்டையோடு ஜாம்பவான்கள் வந்து இசைக்கருவியோடு உட்கார்ந்திருப்பாங்க, நான் ஒரு ஓரமா கிடார் வச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். அவங்க முன்னாடி வாசிக்கவே பயமா இருக்கும்.
இளையராஜாவை பற்றி கருத்துக்கள்
52 . சுருதி,லயம்,ஞானம் உள்ள இளையராஜா என்னை பெருத்தவரை கடவுள் கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா.
53. கதையின் தரம் என்ன-, கதையின் போக்கு என்ன, கதையின் கதாபாத்திரங்கள் யார்,கதை நடைபெறுகிற காலம் என்பவைகளை எண்ணிப்பார்த்து இசையமைக்க கூடியவர் இளையராஜா- கலைஞர். கருணாநிதி
54. என்னைப்பொறுத்தவரை இளையராஜாதான் எனக்கு கடவுள். என்படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் என நிறையபேர் தியேட்டருக்கு வருவார்கள். என்படங்கள் ஒடியதற்கு இளையராஜாதான் காரணம். மறைந்த நடிகர் முரளி.
55. தமிழகத்தின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர் இளையராஜா வைகோ
56. இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. ஆஸ்கார் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சார்.
57. இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை.என்னை போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும்,அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்.இத்தாலியை சேரந்த இசை விமர்சகர் டங்கன்கிளண்டே
58. இசை மரபுகளை மதிக்கிறதோட , அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோட வாழும் உன்னத கலைஞர் அவர். இசை விமர்சகர் சுப்புடு.
59. இளையராஜா வெளிநாட்டில் பிறந்திருந்தால் அவரை கொண்டாடியிருப்பார்கள்,தவறிப்போய் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரின் துரதிர்ஷ்டம் தான். நடிகர் விவேக்.
60. இளையராஜா அமைத்திருக்கும் சிம்பனி ஐந்து இசையோட்டங்களில் அமைந்த முற்றிலும் மேலை இசை முறையிலானது தான். எனினும் இந்திய இசை மரபிலிருந்து பெற்ற தாள முறைகள், பாணி, அலங்காரங்கள் ஆகியவை நிறைந்து காணப்டுகிறது. பிலார்மோனிக் இசைகுழு.
61. இருபத்தியொன்றாம் நூற்றாண்டேங்கும் உலகம் இளையராஜாவின் இசையில் திளைக்கும். பிலார்மோனிக் குழுவின் நடத்துனர்.
62. இளையராஜா ரொம்ப கோபக்காரர் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்காக ஏழுவருடம் அவர் பக்கமே செல்லாமல் பல பாடல்கள் எழுதியிருக்கிறேன்.ஆனால் அவரை சந்தித்த ஏழேவினாடிகளில் எனது எண்ணம் மாறிவிட்டது. பாடலாசிரியர் சினேகன்.
63. நாட்டுப்புற இசையைக்கூட இளையராஜா சாஸ்திரியப்படுத்துகிறார். எழுத்தாளர் அ.மார்க்ஸ்.
64. தமிழர்களின் இரு தலைமுறையினர் இளையராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள். எழுத்தாளர் ஷாஜி
65. இந்த மனிதர் மேல் கணிசமான மரியாதையுடன் தான் நான் சென்னைக்கு சென்றேன். ஆனால் உள்ளூர ஒருவகை அவநம்பிக்கை இருந்தது. ஆனால் இசைக்கான தொடக்க சமிக்ஞை வரிகள் இல்லாமல், இசைத்தொகுப்பாளாரின் சேவை இல்லாமல், ஏன் ஒரு நிறுத்தக்கடிகாரம் கூட இல்லாமல் ஒரு படத்துக்கான இசைக்குறிப்பை ஒர் இசையமைப்பாளர் வெறும் மனக்காணக்காகவே எழுதி அமைக்க அது அந்தக்காட்சியுடன் மிக கச்சிதமாக இணைவதை கண்டபோது என் பிரமிப்பும் வியப்பும் உச்சத்துக்கு சென்றது. லண்டனை சேர்ந்த இசையமைப்பாளரான மைக்கேல்டவுன்செண்ட்.
66. இளையராஜாவின் இசைப்பயணத்தில் பங்காளியாக இருப்பதில் பெருமைபடுகிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
67. இந்த தேசம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் சிலிர்க்க வைக்கும் பெருமைகளுள் இளையராஜாவும் ஒருவர் தெழுங்கு நடிகர் மோகன்பாபு.
68. பொன் மாலை பொழுது' என்ற 'நிழல்கள்' திரைப்பாடல் 'சிம்பனி' இசைக்கு நிகரானது பிரபல எழுத்தாளர் சுஜாதா,
இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனம் கர்வம் பிடித்தரர் என்பது. எந்த ஒரு படைப்பாளிக்கும் தன் படைப்பின் மீதான கர்வம் இயல்பானது தான். இதற்கு இளையராஜா விதிவிலக்காக இருக்க முடியாது. தமிழ்இசை,தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மறுக்கமுடியாத ஒன்று. அவரது 68வது பிறந்த நாளில் அவரது இசைபயணம் தொடர வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக