திமுக தலைவர் கலைஞருக்கு நாளை 88வது பிறந்த நாள். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் திருவாரூரில் தான் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சியை ரத்து செய்வதாகவும், திருவாரூர் நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாளை ( வெள்ளிக்கிழமை) கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை :
‘’எனது 88-வது பிறந்த நாளினையொட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை.
நேரில் எனக்கு வாழ்த்து வழங்க வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க வேண்டுமென்று கட்சி உடன்பிறப்புகள் வற்புறுத்த வேண்டாம் என்றும் - வீட்டிற்கோ கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக என்னைக் கட்சி உடன்பிறப்புகளும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக