ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் முட்டையிடாமல் ஒரு கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம் நடந்துள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுத்துலபுரம் கிராமத்தில் ரமனம்மா என்பவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த நாட்டுக் கோழி வீட்டில் உள்ள கூடையில் முட்டையிடுவது வழக்கம்.
சம்பவத்தன்று ரமனம்மா கூடையில் இருந்த முட்டையை சேகரிக்க கோழியை விலக்கினார். அப்போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கூடையில் முட்டைக்கு பதில் 2 கோழி குஞ்சுகள் கிடந்தது. முட்டைக்குப் பதில் கோழி நேரடியாக குஞ்சை ஈன்று இருந்தது. சிறிது நேரத்தில் அந்த குஞ்சு இறந்து விட்டது. இதுபற்றி தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இந்த அதிசயத்தை காண கிராம மக்கள் அனைவரும் ரமனம்மா வீட்டில் குவிந்து விட்டனர். கால்நடைத்துறை டொக்டரும் குஞ்சை பரிசோதித்தார்.
அவர் கூறும் போது, கோழியின் உடலில் கால்சியம், பாஸ்பரம் சத்து இல்லை. இதனால் முட்டை ஓடு தயாராகவில்லை. குஞ்சு இறந்துதான் பிறந்துள்ளது எனத் தெரிவித்தார்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக