ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரெஞ்சு பத்திரிக்கையில் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு

முஸ்லிம்களின் இறை தூதரான முகமது நபியின் வாழ்க்கை வரலாறு காமிக் வடிகில் பிரெஞ்சு பத்திரிக்கையில் வெளியானது.
Charlie Hebdo எனப்படும் வாராந்த பத்திரிகையின் ஆசிரியரான ஸ்டெஃபனே கார்பொன்னியெர் 'The Life of Mohammed' எனும் தலைப்பில் கார்ட்டூன் கதாபாத்திர உருவங்களுடன் முகமது நபியின் வாழ்க்கை வரலாறை வெளியிட்டுள்ளார்.

இவ்வரலாறு முறையாக ஆய்வு செய்யப்பட்டது என்றும், சிறந்த கல்விதரமுடைய பிரெஞ்ச்- துனிஷிய சமூகவியலாளரால் தயாரிக்கப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முகமது நபியை பற்றி முறையாக அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் குறித்த பத்திரிக்கையில் ஏற்கனவே பல தடவை முஸ்லிம் சமூகத்தினரை இழிவுபடுத்தக்கூடிய வகையில் கார்ட்டூன் பாத்திரங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக