ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐரோப்பாவில் பரவும் வெள்ளரிக்காய் நோய்-இதுவரை 17 பேர் பலி

Cucumber
ஸ்பெயினில் வெள்ளரிக்காய் மூலம் பரவி வரும் நூதன நோய்க்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் தற்போது ஸ்வீடனுக்கும் பரவி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியடைந்துள்ளன.
மரபணு மூலம் மாற்றம் செய்து வளர்க்கப்பட்ட வெள்ளரிக்காய் தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்பெயினில் உயிரிழந்த 17 பேரில் 16 பேர் ஜெர்மன் நாட்டவர்கள். ஒருவர் ஸ்வீடனைச் சேர்ந்தவர்.

ஸ்பெயினில் மரபணு மாற்ற வெள்ளரிக்காயை அதிக அளவில் பயிரிடுகின்றனர். நல்ல விளைச்சலைத் தருவதால் இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வெள்ளரிக்காய்தான் தற்போது வினையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிட்டு உடல் நலம் பாதித்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்பெயின் வெள்ளரிக்காய்க்கு ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன.

சர்ச்சைக்கிடமான வெள்ளரிக்காயை பரிசோதித்தபோது அதில் இகோலை என்ற பாக்டீரியா இருந்தது தெரிய வந்தது. இதனால் தற்போது வெள்ளரிக்காயை விற்பனை செய்ய ஸ்பெயின் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயினிலிருந்து வரும் பழங்கள், காய்கறிகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று ஐரோப்பியநாடுகள் பலவும் தடை விதித்துள்ளன.

சர்ச்சைக்கிடமான வெள்ளரிக்காயை சாப்பிடுவோருக்கு சிறுநீரகம் கடுமையாக, பாதிக்கப்பட்டு மரணத்தில் கொண்டு போய் விடுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடனில் ஒருவர் பலி

தற்போது ஸ்வீடனிலும் இந்த வெள்ளரிக்காய் நோய் பரவி வருகிறது. அங்கு ஒரு பெண் இதுவரை உயிரிழந்துள்ளார். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக