பிக்பஜார் சென்றால், அரிசி, பருப்பு, காய்கறிகள் மட்டுமல்ல, இனி நானோ காரையும் வாங்கலாம்
நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ப்யூச்சர் குழுமத்துக்கு சொந்தமான பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்ய டாடா முடிவு செய்துள்ளது. இதற்காக, டாடா மோட்டார்சுக்கும், பியூச்சர் குழுமத்துக்கும் இடையே உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கள மற்றும் திடீர் விலை உயர்வு போன்ற காரணங்களால் நானோ காரின் விற்பனை கடுமையாக சரிந்தது. அதளபாதளத்திற்கு சென்ற நானோ காரின் விற்பனையை தூக்கி நிறுத்த கடும் பிரயேத்னங்களை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டு வருகிறது.
டிவி விளம்பரங்கள் மற்றும் அதிரடி சலுகைகளை அறிவித்து நானோவின் விற்பனையை டாடா ஓரளவு தூக்கி நிறுத்தியுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு புண்ணியம் இல்லை. இந்நிலையில், முதன்முறையாக சில்லறை வர்த்தக நிலையங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்யும் முயற்சியில் டாடா ஈடுபட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ப்யூச்சர் குழுமத்துக்கு சொந்தமான பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, டாடா, பியூச்சர் குழுமம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாடு முழுவதும் உள்ள பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்யும் முயற்சி பரிச்சார்த்த முறையில் மேற்கொண்டோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஒரு மாதத்தில் பிக்பஜார் மூலம் 450 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நானோவின் மொத்த விற்பனையில் 5 சதவீதம் பிக்பஜார் மூலம் விற்பனையாகி உள்ளது. எனவே, பிக்பஜார் மூலம் நானோவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பியூச்சர் குழுமத்துடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.
டாடாவின் முயற்சி நல்ல பலனளிக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் வியந்து பாராட்டியுள்ளனர். இதனால், இழந்த மார்க்கெட்டை நானோ மீண்டும் பிடிப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரிசி, பருப்போடு சேர்த்து நானோ காரையும் விற்கும் அளவுக்கு மாறி விட்டதே டாடா.
0 நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ப்யூச்சர் குழுமத்துக்கு சொந்தமான பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்ய டாடா முடிவு செய்துள்ளது. இதற்காக, டாடா மோட்டார்சுக்கும், பியூச்சர் குழுமத்துக்கும் இடையே உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கள மற்றும் திடீர் விலை உயர்வு போன்ற காரணங்களால் நானோ காரின் விற்பனை கடுமையாக சரிந்தது. அதளபாதளத்திற்கு சென்ற நானோ காரின் விற்பனையை தூக்கி நிறுத்த கடும் பிரயேத்னங்களை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டு வருகிறது.
டிவி விளம்பரங்கள் மற்றும் அதிரடி சலுகைகளை அறிவித்து நானோவின் விற்பனையை டாடா ஓரளவு தூக்கி நிறுத்தியுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு புண்ணியம் இல்லை. இந்நிலையில், முதன்முறையாக சில்லறை வர்த்தக நிலையங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்யும் முயற்சியில் டாடா ஈடுபட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ப்யூச்சர் குழுமத்துக்கு சொந்தமான பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, டாடா, பியூச்சர் குழுமம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாடு முழுவதும் உள்ள பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்யும் முயற்சி பரிச்சார்த்த முறையில் மேற்கொண்டோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஒரு மாதத்தில் பிக்பஜார் மூலம் 450 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நானோவின் மொத்த விற்பனையில் 5 சதவீதம் பிக்பஜார் மூலம் விற்பனையாகி உள்ளது. எனவே, பிக்பஜார் மூலம் நானோவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பியூச்சர் குழுமத்துடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.
டாடாவின் முயற்சி நல்ல பலனளிக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் வியந்து பாராட்டியுள்ளனர். இதனால், இழந்த மார்க்கெட்டை நானோ மீண்டும் பிடிப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரிசி, பருப்போடு சேர்த்து நானோ காரையும் விற்கும் அளவுக்கு மாறி விட்டதே டாடா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக