இன்று வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதிர்ச்சிக்குக் காரணம் பெயர் மாறி இருப்பது தான்.
ஆ.ராசாவின் நண்பரும் 2ஜி ஊழலில் சி.பி.ஐ-ஆல் விசாரிக்கப்பட்டவரும் க்ரீன் ஹவுஸ் எம்.டி.யுமான சாதிக் பாட்சா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான் ஆ.ராசாவிற்கே இது நடக்கும் என் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஆ.ராசா வாய் திறந்தால் பெரிய தலைகள் உள்ளே போக வேண்டியிருக்கும் என்பதால் இத்தகைய களையெடுப்பு அதிகார பலம் உள்ளவர்களால் நடத்தப்படுவதே வழக்கம்.
தா.கி. கொலை வழக்கு முதல் சங்கர ராமன் கொலை வழக்கு வரை சாட்சிகள் மிரட்டப்படுவதையும், அந்தர் பல்டி அடிப்பதையும் இந்த ஆட்சியில் பார்த்துக் கொண்டே வருகிறோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா, ஆ.ராசா போன்றோர் ஆளும் தரப்புக்கு ஒத்துழைக்க நினைத்தாலும் ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் பெரிதாகப் பொய் சொல்லித் தபிக்க முடியாது என்பதே உண்மை.
இது தற்கொலை என்றே செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர் தூக்கில் பிணமாகத் தொங்கும் நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளார். கொலையா என்ற விசாரணை நடந்தாலும் முடிவு என்ன ஆகும் என்பது நாம் அறிந்ததே. தெருக்கோடியிலிருந்து பல்லாயிரம் கோடி லெவலுக்கு கடந்த 5 வருடங்களில் வளர்ந்தவர் சாதிக் பாட்சா. நமது சட்டங்களின் வலிமை அனைவருக்கும் தெரியும். தீர்ப்பு வரவே எப்படியும் 20 வருடங்கள் ஆகலாம். போபர்ஸ் வழக்கில் குவாத்ரோசியை விட்டது போல், அப்போது விட நேரிடலாம். அப்படி இருக்கும்போது, அவர் நம் நீதிமன்றங்களுக்குப் பயந்தா தற்கொலை செய்திருப்பார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக