அதிமுக ஆட்சிக்கு வந்தால் ?
அதிமுக ஆட்சிக்கு வந்த உடன்,
- பதிய சட்டசபைக்கட்டிடம் காலி செய்யப்பட்டு சட்டசபையும் தலைமையகமும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படும்
- புதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு முழுதும் பச்சைப் பெயிண்ட் அடித்து யாகம் நடத்தி கிளியர் செய்யப்படும்
- சசிகலா பேரவை இனி புதிய சட்டசபைக் கட்டிடத்தில் செயல்படும்.
- உடன்பிறவா சகோதரிக்கு துணைமுதல்வர் பதவி. அறிஞர்கள், சான்றோர்கள் பாராட்டு.
- அஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்?). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு
- சத்துணவில் முட்டை நிறுத்தப்படும், அதற்குப் பதிலாக உடன்பிறவா சகோதரியின் ஒண்ணுவிட்ட அத்தையின் மாமனாருடைய தம்பியின் மருமகன் நடத்தும் பண்ணையில் செய்யப்பட்ட சத்துருண்டை வழங்கப்படும்
- கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்
- டாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல?)
- எந்த மொழியில் பெயர் வைத்தாலும் படங்களுக்கு வரிவிலக்கு. அதைப் பாராட்டி சினிமாத்துறை முதல்வருக்கு பாராட்டு விழா.ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு!
- சென்னைக்கு தொழில் தொடங்க வரும் கம்பெனிகள் பெங்களுருக்கு அனுப்பி வைக்கப்படும் (எல்லாம் ஒரு பாசம்தான், பின்னே பெங்களுரும் இந்தியாதானே?)
- 108 ஆம்புலன்ஸ் விளம்பரம் ஜெயாடிவியில் மட்டும் வரும்
ஓக்கே காமெடி போதும், இனி கொஞ்சம் சீரியசா பார்ப்போமா?
- காவிரிப் பிரச்சனையை மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்து தீர்ப்பார்.
- முல்லைப் பெரியார் அணைக்காக மதுரையில் ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்
- ஈழப்பிரச்சனைக்காக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
- தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுதும் பந்த், ஆர்ப்பாட்டம்
- தமிழகத்திற்குப் போதுமான மின்சாரம் ஒதுக்க்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கேன்சல்
- சென்னை மெட்ரோ திட்ட வேலைகள் நிறுத்தி வைப்பு, இதுவரை போடப்பட்ட தூண்கள் மற்றும் பாலத்தின் தரம் பற்றி ஆராய தொழில்நுட்பக் குழு!
- தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனததை ஜெயாடிவி வாங்கும்.
- திமுகவை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிடும். காங்கிரசுடன் அதிமுக மறுபடி கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சரவையில் இடமும் பிடிக்கும்.
- அதைப் பார்த்து மருத்துவர் அய்யா அவர்கள் மீண்டும் சகோதரியுடன் இணைவார். அன்புமகன் ஒருவழியாக மீண்டும் மத்திய அமைச்சராகுவார் (அப்பாடா.........!).
- இறையாண்மைக்கு எதிராக பேசியதற்காக சீமான் மறுபடி கைது செய்யப்படுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக