ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. துப்பாக்கி மிரட்டலில் முடிந்த டெலிவிஷன் நேரடி விவாதம்.(வீடியோ இணைப்பு)


ஜோர்டான் நாட்டில் உள்ள ஜோ சாட் என்ற தனியார் டெலிவிஷன் சேனல், சிரியா விவகாரம் பற்றி ஒரு நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில், முகமது ஷாவப்கா என்ற எம்.பி.யும், மன்சூர் சய்ப் அல்-தி முராட் என்ற அரசியல் பிரமுகரும் பங்கேற்றனர்.

சிரியா விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. திடீரென தனிப்பட்ட முறையில் வசைபாடத் தொடங்கி விட்டனர். எம்.பி.யை பார்த்து, `நீ இத்தாலி உளவுப்படையின் ஏஜெண்டு' என்று முராத் கூறினார். உடனே சூடான எம்.பி., `நீ ஒரு ரவுடி' என்று கூறியபடி, தனது ஷுவை கழற்றி முராத் மீது எறிந்தார்.
இதனால் அவமானம் அடைந்த முராத், தனக்கு முன்பிருந்த மேஜையை தள்ளிவிட்டு, எம்.பி.யை நோக்கி முன்னேறினார். அந்த கட்டத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக எம்.பி. தனது `கோட்' பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து முராத்தை நோக்கி குறி வைத்தார்.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த முகமது ஹபாஷ்நேவுக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவர் இருவரையும் சமாதானப்படுத்த பெரிதும் போராடினார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சேனல் நிர்வாகம், வேறு நிகழ்ச்சிக்கு தாவிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக