ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

முடிந்தல் எமது இராணுவ வீரர்களை தமிழக அரசியல் வாதிகள் தடுக்கட்டும்! - இராணுவத் தளபதி சவால்!!

இலங்கையின் சிறப்புப் படையணியைச் சார்ந்த 45 இராணுவ உயரதிகாரிகள் எதிர்வரும் டிசம்பரில் பயிச்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.

முடிந்தால் அவர்களை தமிழக அரசியல்வாதிகள் தடுத்துப் பார்க்கட்டும் என சவால் விட்டுள்ளார் இலங்கையின் இராணுவத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய.


மேலும் அவர், இலங்கை தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் ௭திர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தமிழக அரசியல்வாதிகளின் ௭திர்ப்புகளுக்கு அஞ்சி, ராணுவ ரீதியிலான எமது நடவடிக்கைகளை கைவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் 143 படையணிகளின் கொடிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் இலங்கை இராணுவ தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய இராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது.

இந்தியாவில் சுமார் 800 இலங்கை இராணுவ வீரர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். அதேபோன்று இந்திய இராணுவ வீரர்களும் இலங்கையில் குறிப்பிட்ட சில தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். எமக்கும் இந்தியாவுக்கும், இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது.

ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு ௭திரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான் தமிழகம். இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய பிரதேசம் சவாலாக அமையாது.

தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம். எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படையணியை சார்ந்த 45 உயரதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர். முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக