ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லுடன் அரச மரக்கிளையையும் சாஞ்சியில் நட்டார் மஹிந்த!


இந்திய மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஏராளமான எதிர்ப்புக்களின் மத்தியிலும் மத்திய பிரதேச சாஞ்சியில் புத்த சிலைக்கும் பல்கலைக்கழகத்துக்குமான அடிக்கல்லை நட்டு வைத்தார் மஹிந்த ராஜபக்‌ஷ.

குருக்கள் வேத மந்திரங்கள் ஓத, எம்.பி. கவர்னர் ராம் நரேஷ் யாதவ், மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புடைசூழ அடிக்கல்லை நாட்டினார் மஹிந்த ராஜபக்‌ஷ.



அதியுச்ச பாதுகாப்பாக உலங்கு வானூர்தியில் சாஞ்சிக்கு வந்திருந்த ராஜபக்‌ஷவை மத்திய பிரதேச கலாச்சார மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் லக்‌ஷ்மிகாந்த் சர்மா வரவேற்றார்.

ஆசிய நாடுகளுக்கிடையே பரஸ்பர உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ஆய்வுகளுக்காக கட்டப்படும் சாஞ்சி பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கையில் இருந்து கொண்டு வந்த மஹாபோதி அரச மரத்தினை சாஞ்சி பல்கலைக்கழகத்தில் புத்தர் சிலை நடுவதற்காக தன்னுடைய சிறப்புப் பரிசாக கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து கொண்டு வந்த இவ் அரச மரச் செடியானது, அனுராதபுரத்தில் உள்ள பிரபல்யமான பெளத்த விகாரையில் அமைந்திருக்கும் பழமையான வரலாற்றுமிக்க அரச மரத்தில் இருந்து சாஞ்சிக்காக பதிவைத்து கொண்டு வரப்பட்டதாகவும், இது ஒரு சிறந்த மரமெனவும், அரச மரத்தின் கீழ் இருந்துதான் சித்தார்த்த கெளதம புத்தர் ஞானம் பெற்றதாகவும் அதனால்தான் இச்செடியை சாஞ்சிக்கு கொண்டு வந்ததாகவும் பெருமை கூறினார் மஹிந்த.

என்னை சாஞ்சிக்கு அழைத்து அடிக்கல் நாட்ட வைத்தமைக்கு என் நாட்டு மக்கள் சார்பிலும், என் மதம் சார்பிலும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை சிறையில் அடைத்து சாஞ்சியில் அடிக்கல்லும், புத்தர் அமர அரசமரத்தினையும் மஹிந்த நட்டு வைக்க அனுமதித்த மத்திய அரசு பல இன்னல்களை எதிர்கொள்ளும் என ஆர்ப்பாட்டம் செய்த கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக