இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (06) கொழும்பு புறக் கோட்டை பகுதியிலுள்ள கடைகள் சில, மூடப்பட்டது. பின்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று அங்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ் நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து(அவர் ஜாக்கெட்டோடு மட்டும் நிற்பதுபோல) அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக கொண்டு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சிங்களவர்கள். இதேவேளை இவர்கள் இந்திய வம்சாவெளி வியாபாரிகளையும் மிரட்டி இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர். நேற்றைய தினம் விமல் வீரவம்ச தெரிவித்த கருத்துக்களும் , தமிழ் வியாபாரிகளைக் குறிவைத்து வெளியிடப்பட்டதாககும்.
நாங்கள் திருப்பி அடித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று விமல் வீரவம்ச குறிப்பிட்டிருந்தது, இந்திய வம்சாவெளி வியாபாரிகளைத் தான். இதன் காரணமாகவே சில தமிழர்களும் இன்றைய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என மேலும் அறியப்படுகிறது. இலங்கை இராணுவம் போரின் போது பல தமிழ் பெண்களை மானபந்தப் படுத்தியது. போர் மரபுகளை மீறி இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை உருவி அவர்களை அவமானப்படுத்தியது. இதே பாணியில் இன்று சிங்களவர்களும், செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து அதனை, தூக்கிக் காட்டி, ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். இது கண்டிக்கப்படவேண்டிய விடையம் ஆகும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக