ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்கேட்சின் சொத்துகள் அவரது குழந்தைகளுக்கு கிடையாது

 search
பில்கேட்சின் சொத்துகள் அவரது குழந்தைகளுக்கு கிடையாது, உலக கோடீசுவரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் மைக்ரோசாப்ட் கம்ப்ïட்டர் கம்பெனியின் அதிபர் பில் கேட்ஸ். இவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி ஆகும். இவர் ஏழை நாடுகளின் ஏழைகளுக்கு உதவுவதற்காக தன் சொத்துகளில் ஒரு பகுதியை செலவிட்டு வருகிறார். 54 வயதான இவருக்கு 44 வயதான இவர் மனைவி மெலிந்தாவுக்கும் ஜெனீபர்,ரோரி, போயேபே என்ற பெயரில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.


என் சொத்தை என் குழந்தைகளுக்கு கொடுக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. என் சொத்துகளை என் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதாக எனக்கு படவில்லை. அது அவர்களுக்கும் நல்லது இல்லை. சமூகத்துக்கும் நல்லது இல்லை. என்று பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இதுவரை அவர் ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயை பல சமூக நல திட்டங்களுக்கு கொடுத்து உதவி இருக்கிறார். இவரது உதவியால் 25 கோடி ஏழைக்குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது.

தடுப்பு ஊசி போடப்படாததால், 1960-களில் ஆப்பிரிக்காவில் ஆண்டு தோறும் 2 கோடி சிறுவர்கள் இறந்தனர். இப்போது தடுப்பு ஊசி போடப்படுவதால் சாவு எண்ணிக்கை குறைந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக