ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திரு: வாரன் பஃபட் அவர்கள்…



      இவர் உலகின் no.1 பங்கு முதலீட்டாளர் 
     இவரை பணக்கடவுள் என்று சொல்கிறார்கள்   
பங்குசந்தையின் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் வாரன் பஃபட்
தன் வாழ் நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த 37 பில்லியன் டாலர் பணத்தை உலக மக்களின் நல்வாழ்வுக்காக நன்கொடையாக அளித்திருக்கிறார்… 
37 பில்லியன் டாலரா?  1 பில்லியன் என்பது 100 கோடி
37 பில்லியன் டாலர் என்பது கிட்ட தட்ட இந்திய மதிப்பில் 1,66,500 கோடி ரூபாய்
இது 2007-ம் ஆண்டில் 57 பில்லியன் டாலராக வளர்ந்தது.. இந்திய மதிப்பு கிட்ட தட்ட 2,56,500 கோடி ரூபாய்
தற்பொழுது சொல்லவே வேண்டாம் அது இன்னும் பன்மடங்காக உயர்ந்திருக்கும்
    இவர் தனது 13 வயதில் சொன்னது – 30 வயதிற்குள் நான் மில்லியனர் ஆவேன், அப்படி ஆகாமல் போனால் ஒமாஹாவின் உயரமான கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து உயிரை விடுவேன்! – ஆனால் அவர் சொன்ன காலத்திற்கு முன்னதாகவே மில்லியராக ஆகியும் காண்பித்தார்… அதான் வாரன் பஃபட்…
நன்றி : திரு. செல்லமுத்து குப்புசாமி அவர்கள்..(வாரன் பஃபட் – பணக்கடவுள் என்ற புத்தகத்திலிருந்து.)

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. செல்லமுத்து அவர்கள் இந்த புத்தகத்தை ப்ற்றி சொல்லியிருப்பது..
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது. 

ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். 

சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். 

ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது? 

பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக