ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரமாண்டமாக அரங்கேற தயாராகும் சேக்ஸ்பியரின் 37 நாடகங்கள்


Shakespeareஆங்கிலேய நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரின் 37 நாடகங்களும் 37 மொழிகளில் அரங்கேற்றப்படவுள்ளன.
இந்த நிகழ்வுகள் 2012 ஒலிம்பிக்கின் கலாச்சார விழாக்களாக அரங்கேற்றப்படுவதற்கான ஒத்திகைகளாக இடம்பெறுகின்றன.
இவை உருது, சுவாஹலி ஆகிய மொழிகளிலிருந்து பிரபல்யமான மொழிகள்வரை அரங்கேற்றப்படுகின்றன.
முக்கியமாக ஆங்கிலேய உலகிலிருந்து Henry V உம் சிக்காக்கோவின் நிறுவனத்தினால் Othello உம் அரங்கேற்றப்படவுள்ளன.

அதேவேளை லண்டன் நிறுவனத்தினால் பிரித்தானியாவின் சைகை மொழியினால் Love’s Labor’s Lost என்ற நாடகம் அரங்கேற்றப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
இவற்றை அந்தந்த நாடுகளின் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துகின்றன. ஹிந்தியில் Twelfth Night உம் கிரேக்க மொழியில் Pericles உம் சுவாஹலியில் Merry Wives of Windsor இஸ்ரேலின் ஹபிமா நிறுவனம் The Merchant of Venice நாடகத்தினையும் அரங்கேற்றியது.
இதேவேளை பலஸ்தீனத்தில் ரமெல்லாவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் Richard II  இனையும் Henry VI நாடகத்தினை சேபியா, அல்பேனியா மற்றும் மசிடோனியாவின் திரையரங்குகளால் Balkan trilogy என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
சீனாவின் தேசிய திரையரங்கு Richchard III இனை அரங்கேற்றுகின்றது.  King Lear இனையும் ஆப்கானிஸ்தானின் நிறுவனம் ஒன்று முதன்முறையாக நாட்டின் வெளியே அரங்கேற்றும் நாடகமாக A Comedy of Errors வும் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக