“ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி, திகார் சிறையில் உள்ள கனிமொழி, இன்றும் 48 நாட்களில் வெளியே வந்து விடுவார்,” என்று உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் அவரது தாயார் ராஜாத்தியிடம், சிரூர் லட்சுமிவர் தீர்த்த சுவாமிகள், அவரது தாயார் ராஜாத்தியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் பல மாதங்களாக திகார் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், கருணாநிதியின் துணைவியும், கனிமொழி தாயாருமான ராஜாத்தி, கர்நாடகா மாநிலம் உடுப்பியிலுள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் சிரூர் மடம், சிரூர் லட்சுமிவர் தீர்த்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, கனிமொழி இன்னும், 48 நாட்களில் அனைத்து பிரச்னைகளிலிருந்து விடுபட்டு, வெளியே வருவார் என அவர் ஆசீர்வதித்ததாக கூறப்படுகிறது.
yes let her come out soon
பதிலளிநீக்கு