ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பதினாறு வயதுப் பெண் எழுதிய அகதிகளுக்கான புத்தகம்.! ஈழம் பிரஸ்


மெலோரா ஷகாபுதீன் (Melora Shahabudin) வயது 16 எழுதிய கதைகளும் கவிதைகளும் அடங்கிய 120 பக்க நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தின் தலைப்பு நாங்கள் கிளம்பும் போது (When we take off)நூலின் உப –தலைப்பு எல்லைகளைக் கடந்த பார்வைகள் (Insights beyond boundaries)

மலேசியாவில் வாழும் அகதிகளின் துயரம் பற்றி இவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் சர்வதேச மட்டத்தில் அதன் சிந்தனைத் திறத்திற்காகவும் உரை நடைச் சிறப்பிற்காகவும் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது. பெயர்வியூ ((Fairview International School) சர்வதேச மாணவர் பள்ளியில் படிக்கும் போது மெலோரா இதை எழுத தொடங்கினார்.
ஒரு வருடத்தில் (2011) புத்தகம் நிறைவு பெற்றது. மெலோராவின் தாய் றொசிமா அலி (Rozima Ali)மலேசியாவின் அகதிகள் ஆணையக் கிளையில் சில காலம் பணியாற்றினார். அகதிகள் பிரச்சினையை அவர் நேரிடையாக அறிந்தவர். மகள் மெலோராவுக்கு அகதிகள் பற்றிய விழிப்பை அவர் ஏற்படுத்தினார்.
தாயாரிடம் கேட்டதை மகள் புத்தகத்தின் கருப்பொருளாக்கினார். ஆனால் எழுத்துருவாக்கம் அவருடைய சொந்த முயற்சியில் ஏற்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley, Malaysia) சந்தித்த அகதிகளுடன் நெருக்கமாகப் பழகி மேலதிக தகவல்களைப் பெற்றதாக மெலோரா கூறுகிறார்.
தனது இளைய சகோதரிகள் இருவர் கடதாசியில் செய்த விமானங்களைப் பறக்க விட்டு விளையாடுவார்களாம். அந்த விமானங்கள் காற்றில் கிளம்பிய வேகத்தில் தரையிறங்கி விடுமாம். புத்தகத்தின் தலைப்பு இந்த விமானப் பறப்பில் இருந்து பெறப்பட்டது.
“அகதிகளை நான் கடதாசி விமானங்களாக நினைக்கிறேன். அவர்கள் கடதாசியைப் போல் காற்றில் அலைகிறார்கள். காற்று அவர்களை மேலே தூக்கி கீழே போட்டு விடுகிறது. அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு இடம் தேடிப் பறக்கிறார்கள்.” என்று மெலோராவின் ஒரு கவிதை குறிப்புணர்த்துகிறது.
இந்த புத்தகம் தலைநகர் கோலா லம்பூர் இஸ்லாமியக் கலைக் கூடத்தில் 2012 ஆகஸ்து 11ம் நாள் வெளியீடு கண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக