ஜமைக்காவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் நம்பர் 1 உலக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை பின்னுக்கு தள்ளி யோஷன் பிளாக் முதலிடம் பிடித்தார்.
ஜமைக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலகின் மிகச் சிறந்த வீரரான உசைன் போல்டை யோஹன் பிளேக் என்ற வீர்ர் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 மீட்டர்களை 9.75 நொடிகளில் கடந்து யோஹன் பிளேக் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். உசைன் போல்ட் 9.86 நொடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை பிடித்த அசபா பாவெல் 9.88 நொடிகளில் கடந்துள்ளார். இவர்கள் மூவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தோல்விக்கு பிறகு கருத்து தெரிவித்த உசேன் போல்ட்:,” ஒலிம்பிக் போட்டியில் தனக்கு மிகப்பெரிய போட்டியாளனாக பிளாக் உறுவாகியிருக்கிறார். அவரையும் வீழ்த்தி முதலிடம் பிடிக்க கடுமையாக பயிற்சி மேற்கொள்ள போகிறேன் ” என்று கூறியுள்ளார்.
கடந்த 4 வருடங்களாக ஓட்டப்பந்தயத்தில் நம்பர் 1-ஆக வலம் வந்தவர் உசேன் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
- NALEEM HASSIM-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக