ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2 வீடுகள், கோவிலில் கைவரிசை: போலீசார் விரட்டியதால் நடுரோட்டில் போட்டு விட்டு தப்பிய கொள்ளையன்.


வடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவில் லோக நாயகி என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 8 வீடுகள் உள்ளன. கீழ் தளத்தில் வசித்து வருபவர் புருஷோத்தமன்.
இவர் சவுதியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. மகள் செசி டாக்டராக உள்ளார். இவர்கள் 2 பேரும் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்காக கடந்த 27-ந்தேதி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையன் ஒருவன் புகுந்தான். இவன் புருஷோத்தமனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றான். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த வெள்ளிக் கொலுசு, மற்றும் குத்து விளக்குகளை திருடினான்.
பின்னர் அருகில் இருந்த என்ஜினீயர் அருண் குமாரின் வீட்டு பின்பக்க கதவை உடைத்தும் கொள்ளையன் உள்ளே சென்று பொருட்களை சுருட்டினான். இவர் திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபழனி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை போனது பற்றி வீட்டு உரிமையாளர்களிடம் போலீசார் போனில் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் வடபழனி 100 அடி ரோட்டில் போலீசார் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெரிய பையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஹாயாக நடந்து சென்றான். இதனை பார்த்த போலீசார், அவனை நிற்குமாறு எச்சரித்தனர். ஆனால் அந்த வாலிபர் பையுடன் ஓட்டம் பிடித்தான்.
ஆனால் போலீசார் ஜீப்பில் விடாமல் துரத்திச் சென்றனர். இதனால் பயந்து போன அவன் பையை நடுரோட்டில் போட்டு விட்டு அருகில் இருந்த கட்டிடத்தின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான்.
போலீசார் விரட்டிச் சென்றபோது, அந்த வழியாக பஸ் ஒன்று சென்றுள்ளது. இது திருடன் தப்பிச் செல்வதற்கு வசதியாக போய்விட்டது. பின்னர் போலீசார் நடுரோட்டில் கிடந்த பையை எடுத்து பார்த்தனர். அதில் குத்து விளக்குகளும், சில நகைகளும் இருந்தன. இதனை கைப்பற்றிய போலீசார் அது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
புருஷோத்தமன், அருண்குமார் ஆகியோரது வீடுகளில் சுமார் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தப்பி ஓடிய கொள்ளையன் 2 பேரின் வீடுகளிலும் கைவரிசை காட்டியவன் என்பதையும் கைரேகை மூலம் போலீசார் உறுதி செய்துள்ளனர். தப்பி ஓடிய அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாள் இரவில் கோவில் மற்றும் 2 வீடுகளில் கொள்ளையன் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் அருகில் உள்ள கோவில் ஒன்றிலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையன் திருடிச் சென்றுள்ளான். இதற்கிடையே நேற்று இரவு 10.45 மணி அளவில் சூளை தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக