இதுகுறித்து, டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: குலா நமிக் ஹாசனின் வலது கண்ணை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இடது கண்ணில் லென்ஸ் பொருத்தும் இடமும் (கண் பாவை) வெண்மையாக மாறியிருந்தது. இதனால், ஒளி கண்ணுக்குள் செல்ல முடியாமல் இருந்தது. இதைச் சரிசெய்து, "பைப்பரின்' பசை எனும் தொழில்நுட்பம் மூலம், செயற்கை லென்ஸ் (எடூதஞுஞீ ஐOஃ) பொருத்தப்பட்டது. கடந்த மாதம் 25ம் தேதி செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின், இவரால் தற்போது படிக்கவும், வண்ணங்களை பார்க்கவும் முடிகிறது. இவ்வாறு அமர் அகர்வால் கூறினார். கண் மருத்துவ நிபுணர் கீதா சிவராஜ், குலா நமிக் ஹாசனின் உறவினர் மக்முத் ஆகியோர் உடனிருந்தனர்.
குலா நமிக் ஹாசன் கூறும்போது, ""18 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் பார்வை பெற்றதற்காக, கடவுளுக்கும், டாக்டர் அமர் அகர்வாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். குலா நமிக் ஹாசனின் கணவர் உஸ்மான். இவர்களுக்கு, முகமது, 7 என்ற மகனும், ரியான் 4 எனும் மகளும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக