இருப்பினும் மாடிப் படியில் இருந்து மேலும் 3 சிங்களவர்கள் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுகளோடு வந்து தமிழ் உணர்வாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். தமிழனை அழித்துவிட்டு சிங்கக் கொடியோடு தமிழ் நாட்டில் என்ன துணிவில் நீங்கள் நடமாடுகிறீர்கள் எனக் கேட்டு தமிழ் உணர்வாளர் அவர்களை நையப்புடைந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது அவர்களின் ரீ சேட்டுகளைக் களற்றி சிகரெட் லைட்டர்கொண்டு எரித்துள்ளனர். சிங்கக் கொடி பொறிக்கப்பட்ட அந்த ரீ சேட்டுகளை அவர்கள் எரித்ததைப் பார்த்த சிங்களவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர். இச் சிங்களவர்களுக்கு அப்பகுதியில் உள்ள எந்த ஒரு விடுதியும் தங்க அனுமதி கொடுக்கக்கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எச்சரித்து அவ்விடத்தில் இருந்து அகன்றனர் என சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டில் தற்போது ஈழத் தமிழர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டு மீனவர்களை கொடூரமாகக் கொலைசெய்யும் இலங்கை இராணுவத்தின் மீது தமிழக மக்கள் பெரும் கோபத்துடன் இருப்பதும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக