ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பரமக்குடியில், திட்டமிட்டு ‘கலவரத்தை’ தொடக்கிய பின்னணி இதோ!


“பரமக்குடியில் திடீரென ஏற்பட்ட கலவரம்” என்று கூறினாலும், கலவரம், ‘திடீரென’ ஏற்படவில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட கலவரம்தான் என்று தெரிகிறது. ஆனால், ஸ்பாட்டில் நின்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு குதித்து விட்டதில், திட்டமிட்டவர்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக முடிந்திருக்கிறது.


பரமக்குடி, இந்தியா:  தென் மாவட்டங்களின் சில பகுதிகளில், வன்முறை அடித்தளம் கொண்ட சில ஜாதிக் கட்சிகளின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்து வருவதை தடுத்து தூக்கி நிறுத்தும் முயற்சிதான், இந்தக் கலவரத்தின்  பேஸ் என்கிறார்கள். அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இமானுவேல் சேகரன் நினைவு தினம் வசதியாக வந்து அமைந்திருக்கிறது.

அன்றைய தினத்தை உபயோகித்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழக உளவுத்துறை, ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறை வெடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே சென்னைக்கு அறிக்கை கொடுத்திருந்ததாக தெரிகிறது. அத்துடன், நினைவுநாள் நெருக்கத்தில் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் சனிக்கிழமை கொலை செய்யப்பட, காவல்துறை அலர்ட் ஆகியது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவும் எடுக்கப்பட்டன.

அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, வெளி மாவட்டங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள், ஜாதிக்கட்சி தலைவர்கள் யாரும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் முடியும்வரை பரமக்குடிக்கு வர காவல்துறை விதித்த தடை.

தடை இருப்பது தெரிந்தும், தூத்துக்குடியில் இருந்து பரமக்குடிக்கு வர முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், காவல்துறையால் வல்லநாடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். போலிஸ் தடுத்தும் கேளாமல் பரமக்குடிக்குச் செல்வேன் என்று அவர் பிடிவாதம் காட்டியதில், கைது செய்யப்பட்டார்.

ஜான் பாண்டியன் வருகிறார் என்று பரமக்குடியில் விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. இதனால் காலை 10 மணியிலிருந்தே அவரது வருகையை எதிர்பார்த்து, பரமக்குடியில் பலர் காத்திருந்தனர். மதியம் 12 மணியளவில் அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட தகவல், காத்திருந்த கூட்டத்துக்கு சூடேற்றும் விதத்தில் உணர்ச்சிகரமாக கூறப்பட்டது. அதன் பின்னணியில் துல்லியமான திட்மிடலும், முன்னேற்பாடுகளும் தெரிந்தன. கைது செய்யப்பட்ட சேதி வந்தவுடன் எப்படிச் செயற்பட வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்துவிட்டு வந்ததுபோல இருந்தன இதை ஆர்கனைஸ் பண்ணியவர்களின் நடவடிக்கைகள்.

ஜான் பாண்டியனுக்காக காத்திருந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் திரட்டி, பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில் திரட்டியவர்கள், ரோட்டை மறித்து மறியல் செய்யத் தொடங்கினார்கள். மறியல் செய்யும் ஆட்களிடையே, வன்முறைக்கு தயாராக வந்திருந்த ஆட்கள் சுலபமாக கலந்து கொண்டார்கள். சாலை மறியல் செய்தவர்களின் கோஷங்களில், “காவல்துறையை வெட்டுவோம், ஓடஓட விரட்டுவோம்“ என்ற கோஷங்களும் லைட்டாக புகுத்தப்பட்டன.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் உணர்ச்சி வசப்பட்ட நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இதற்குள் ஐந்துமுனை ரோடு கடந்து, குறிப்பிட்ட சமூகத்தினரால் நன்கு அறியப்பட்ட பெட்டிக்கடை உள்ள சந்தில் மதுபான விநியோகமும் நடந்தது. காவல்துறையினர் மிக சொற்ப அளவிலேயே காணப்பட்டனர். யாரும் யாரையும் தடுக்கவில்லை.

கோஷங்கள் வலுக்கத் தொடங்கி, கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்கடங்காத நிலைக்குப் போகத் தொடங்கவே, அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் ஸ்பாட்டுக்கு வந்திறங்கினார். சாலை மறியலைக் கைவிடுமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.

அவரது சமாதானப் பேச்சுக்கள் இந்தக் கூட்டத்தில் எடுபடவில்லை. ஆளாளுக்கு கூச்சல் போடத் தொடங்கினார்கள். கூட்டத்துக்குள் ஊடுருவியிருந்த ஆட்கள்வேறு உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் காவல்துறையினரைச் சுற்றி வளைக்கத் தொடங்கியது. அதில் இருந்த ஒருவர், செந்தில்வேலனின் சட்டையைப் பிடித்து இழுத்தார். பதிலுக்கு, செந்தில்வேலன் கையை ஓங்கினார்.

இதற்காக காத்திருந்ததுபோல காரியங்கள் நடக்கத் தொடங்கின. சுவிட்ச் போட்டதுபோல, சடசடவென்று போலீசார் மீது கற்கள் வந்து விழத் தொடங்கின. கல்வீச்சின் தொடக்கம், இயல்பாக நடைபெறும் கோபத்தின் வெளிப்பாடாக தெரியவில்லை. ஆனால், அந்தத் தொடக்கம் நன்றாகப் பற்ற வைத்தது. உணர்ச்சிவசப்பட்ட கூட்டம், மிகுதியைக் கவனித்துக் கொண்டது. தூண்டிவிடப்பட்ட கோபம், கலவரமாக மாறியது.

அதுவரை ஐந்துமுனை ரோட்டில் கும்பலாக நின்றிருந்த ஆட்கள் எல்லாத் திசையிலும் ஓடுவதும், திரும்பி வருவதுமாக இருந்தனர். வேடிக்கை பார்க்க நின்ற கூட்டமும் சிதறி ஓடியது. கூட்டத்தில் சிக்கிய பரமக்குடி டி.எஸ்.பி. கணேசனை குறிவைத்த சிலர், நேருக்கு நேராகவே அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.

தரையில் விழுந்த அவர் உடனடியாக எழ முடியாத நிலையில் இருக்க, அவரது தலையின் மீது, பெரிய கல் ஒன்றைப் போட்டு விட்டு, அருகில் நின்றிருந்த போலிஸாரின் கைகளில் சிக்காமல் தப்பி ஓடினர் சிலர். தலையில் காயமடைந்த டி.எஸ்.பி. கணேசனை, அங்கிருந்து சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர் மற்றைய போலிஸார்.

இதற்குள் சம்பவம் நடந்த இடத்தில் கல்வீச்சு உக்கிரமடையத் தொடங்கியது. ராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் மீது குறிவைத்து கற்கள் வீசப்பட்டன. காயமடைந்த அவர், நினைவிழந்து வீழ்ந்தார். செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர்.

கலவரம் பெரிதாகிக் கொண்டே போனது. தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்தைக கொண்டு வந்தனர் போலிஸார். கூச்சலிட்டபடியே அந்த வாகனத்துக்கு தீ வைத்தனர் சிலர். அது பற்றி எரியத் தொடங்கியது. அதைப் பார்த்து உற்சாகமடைந்த சிலர், சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வண்டியை எரித்தனர்.

கலவரம், அங்கிருந்து பரமக்குடி டவுனின் மற்றைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பரமக்குடி ஸ்தம்பித்தது. பரமக்குடி வழியாகச் செல்லும் வாகனங்கள், கலவரம் பற்றிய சேதி கேட்டு நகருக்கு வெளியே நின்றுவிட்டன. பின்னர், பரமக்குடி ஊடாக வடக்கே மதுரைக்கும், தெற்கே ராமேஸ்வரத்துக்கும் செல்லும் வாகனங்கள், சுற்றுப் பாதையாக சிவகங்கை, திருவாடனை, ராமநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.

பரமக்குடியில், ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பரமக்குடிக்கு வெளியேயும் கலவரம் தொடர்ந்தது. முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர, பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டன. சிக்னல்கள் இயங்காததால், ரயில்கள் ஓடுவது நின்றது. பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களை உடைத்து நொருக்கிய ஒரு கும்பல், ரயில்வே பாதை வீதியைக் கடக்கும் ரயில்வே கேட்டையும் உடைத்தது. அதற்கு அருகிலிருந்த கேட்-கீப்பர் அறையும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. அடித்து நொருக்கப்பட்டது.

பரமக்குடி ஊடாக ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவாக ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்து, வெவ்வேறு மருத்துவமனைகளில் தங்கியுள்ளனர். சேதமடைந்த சொத்து விபரம் இன்னமும் எடுக்கப்படவில்லை.

அரசியல் கட்சிகள் எல்லாம் சரம்சரமாக அறிக்கை விடுகின்றன. நேரம் கிடைத்த அரசியல் தலைவர்கள், நேரில் சென்று அறுதல் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு, அறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கலவரத்தைத் திட்டமிட்டு தொடக்கியவர்கள் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. அதன் பின்னணியில் நின்றவர்களை யாரும் கண்டித்ததாகவும் தெரியவில்லை. அநேகமான யாரையும் கைது செய்யவும் மாட்டார்கள். கேட்டால், ‘சென்சிட்டிவ்வான ஏரியா’ என்பார்கள்.

அப்படியானால், அந்த ‘ஏரியா’ தமிழ்நாட்டு எல்லைக்குள் இல்லையா? அந்த ஏரியாவில் இவர்கள் கூறும் ‘சென்சிட்டிவ்’ இல்லாத மக்களும் வசிப்பதில்லையா?

2 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் தலித்துகள் சேர்ந்து 9 ஆம் வகுப்பு மாணவனை கொன்றார்கள் என்று சொல்வீர்கள் அப்படிதானே? கொன்றவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.. இதுதான் நீங்கள் சொல்லும் உண்மை நிலையோ?

    பதிலளிநீக்கு
  2. இந்த இணைப்பை பாருங்கள் https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1 இவர்கள் எல்லாம் மனிதர்கள் .... யோசியுங்கள் மக்களே ....

    பதிலளிநீக்கு