. இத்தனையும் முடித்தால் கேஷ் கவுன்டரில் நீ..ள வரிசை நிற்கும். பார்க்கிங் பிரச்னை தனி.
இந்த சகல தொந்தரவுகளில் இருந்தும் விடுபடும் வகையில் ‘வர்ச்சுவல் மளிகை கடை’ திறந்திருக்கிறது இங்கிலாந்தை சேர்ந்த ஒகாடோ நிறுவனம். 2001-ல் தொடங்கப்பட்ட நிறுவனம். முதல் கட்டமாக லண்டன் நகரின் மத்திய பகுதியில் சோதனை முயற்சியாக வர்ச்சுவல் மளிகை கடை திறக்கப்பட்டுள்ளது. வழக்கமான மளிகை கடைக்கு உண்டான எந்த அம்சமும் இங்கு கிடையாது. ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நேரங்கள் காட்டும் அறிவிப்பு பலகை போல ஒரே ஒரு டிஜிட்டல் போர்டு மட்டுமே இருக்கிறது. அதில் வரிசையாக பலசரக்கு சாமான்கள் எடை வாரியாக படம் போட்டு ‘பார்கோடு’ பிரின்ட் செய்யப்பட்டிருக்கும்.
இதை ஸ்கேன் செய்வதற்கு உங்கள் ஸ்மார்ட் போனில் ‘ஒகாடோ ஆன் த கோ’ என்ற சாப்ட்வேர் இருக்க வேண்டும். இதை பயன்படுத்தி, எந்த சாமான் வேண்டுமோ, அதை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்ய வேண்டும். அவை வரிசையாக அந்த சாப்ட்வேரில் பதிவாகும். ‘பர்ச்சேஸ்’ முடிந்த பிறகு, ஓகே பட்டனை அழுத்திவிட்டு வீட்டுக்கு போய்விடலாம். தேர்வு செய்த பொருட்கள் அனைத்தையும் ஊழியர்கள் பேக் செய்து டோர் டெலிவரி செய்துவிடுவார்கள்.
இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் பல இடங்களில் வர்ச்சுவல் மளிகை திறக்க திட்டமிட்டிருக்கிறது ஒகாடோ.
பொருட்களின் பெயர்கள் கொண்ட போர்டு வைக்க மட்டும் இடம் இருந்தால் போதும்.. கடை தொடங்கிவிடலாம் என்கிறார் ஒகாடோ செய்தி தொடர்பாளர் பென் லாவட். ஒகாடோ நிறுவனம் கடை போட்டது இதுதான் முதல் முறையாம். கடந்த 10 ஆண்டுகளாக எஸ்எம்எஸ், இன்டர்நெட் புக்கிங் வழியாகவே விற்பனை செய்து வருகிறது. குடோனில் இருந்து பொருட்கள் கஸ்டமரின் வீட்டுக்கு ஒழுங்காக போய் சேர்ந்ததா என்பதை ஜிபிஎஸ் உதவியுடன் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்கோ நிறுவனம் தென்கொரியாவில் ஏற்கனவே வர்ச்சுவல் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறது. அது இங்கிலாந்தில் கிளை தொடங்க ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் ஒகாடோ முந்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக