ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்சல்குருவுக்கு கருணை காட்டும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி

ராஜீவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை நிறுத்தி கருணை காட்டக் கோரும் சட்டமன்ற தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியைத் தவிர தமிழகத்தின் எல்லா கட்சிகளும் இத்தீர்மானத்தை ஆதரித்தன. எதிர்கட்சியான திமுகவும் இத்தீர்மானத்திற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியது.

இந்நிலையில் இந்த தீர்மானம் இந்தியா முழுக்க மனித உரிமைச் சக்திகளுக்கு உற்சாகத்தை வழங்கிய நிலையில் 2001-ல் இந்திய பாராளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நீதிமன்றத்தால் தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்டுள்ள காஷ்மீரைச் சார்ந்த அப்சல் குருவுக்கு கருணை காட்டக் கோரி காஷ்மீரில் கோரிக்கை எழுந்தது.
காஷ்மீர் சட்டமன்றத்தில் ரஷீத் என்ற சுயேட்சை எம்.எல். ஏ இந்த தீர்மானத்தை பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை மீதான விவாதம் இன்று நடைபெறும் என்ற நிலையில் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் காஷ்மீர் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் அப்சல்குருவுக்கு கருணை காட்டக் கூடாது எனக் கோஷமிட்டனர். இதுமாதிரி சிக்கலான சூழலில் காஷ்மீர் சட்டமன்றம் இன்று இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தோடு ஒப்பிடும் போது தேசியவாத நெருப்பு காஷ்மீரில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பற்றி எரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் பெருந்திரள் ஜனநாயக போராட்டங்களை நடத்தி வருகிற நிலையில், சட்டமன்றத்தில் அவர்களின் குரலை பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள் வலுவாக இல்லை. அங்கு பிஜேபி, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளே செல்வாக்குச் செலுத்துவதால் காஷ்மீர் மக்கள் உணர்வுகள் சட்டமன்றத்தில் பிரதிபலிப்பதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக