ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நடனமாடும் நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட மினி ஸ்கேர்ட் : இந்துக்கள் கண்டனம்



நடனமாடும் நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட 'மினிஸ்கர்ட்' ஆடைகளை அறிமுகப்படுத்திய, ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் அரோராவுக்கு, இந்து அமைப்புக்கள் கடும் கண்டனம் விடுத்துள்ளன.
இந்தியாவை சேர்ந்த மனிஷ் அரோராவின் கலாச்சார ஆடை வடிவமைப்புக்கள் உலக புகழ் பெற்றவை. இவர் அண்மையில் தனது இணையத்தளத்தின் ஊடாக, நடனமாடும் வடிவில் உள்ள நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட, Harem-Pants, Leggings மற்றும் Skirts ஆடைகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த ஆடைகளில் மினிஸ்கர்ட், 570 யூரோவுக்கும், பேண்ட்ஸ் 450 யூரோவுக்கும், Leggings 250 யூரோவுக்கும் விற்பனை விலை பொறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் நிவேதா பகுதியை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவர் ராஜஜ் சேத் கடும் கண்டனம் வெளியிட்டார். இந்து மதத்தின் முக்கியத்துவம் தெரிந்த இந்தியர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புக்களுக்கும் இச்செயலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த ஆடைகள் விற்பனை செய்யப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான லக்ஷ்மியின் உருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் உடைகளை தயாரித்த ஆஸ்திரேலிய ஸ்விம் வேர் நிறுவனம், அவற்றை சந்தைக்கு கொண்டு வருவதற்கு ஆயத்தப்படுத்திய போது இந்து அமைப்புக்களின் கண்டனங்களால் இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக