ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உள்ளாட்சி தேர்தல்… உசுப்பப்படும் வடிவேலு?

உள்ளாட்சி தேர்தலிலும் ‘உள்ளே இறக்கிவிட்டு’ வேடிக்கை பார்க்க ஒரு குரூப் அலைவதாக தகவல். எதிலும் சிக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. இந்த முறை அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தது போனமுறை ஊர் ஊராக அனுப்பி வைத்த கட்சியல்ல என்பதுதான் காமெடி.
நல்லாதான் போயிட்டு இருக்கு எல்லாம். ஏதோ எல்லாரும் சேர்ந்து என்னைய ஒதுக்கி வச்சுட்டதா பேசிக்கிறாங்க பொழப்பத்தவங்க. உண்மையில் நான்தான் சினிமாவை கொஞ்ச காலம் ஒதுக்கி வைச்சுருக்கேன். இந்த இடைப்பட்ட காலத்துல நிறைய காமெடி டிராக் எழுதிகிட்டு இருக்கேன். நிறைய டைரக்டர்கள்கிட்ட கதை கேட்டுகிட்டு இருக்கேன்.
நான் ஒரு பந்தய குதிரை. புல்லு திங்கவும் கொள்ளு திங்கவும் ஒதுங்கியிருக்கேன். புல்லு திங்கிற நேரத்துல எவனோ புரளியை கிளப்பிவிடுறான் என்கிறார் வடிவேலு.
இதெல்லாம் ஒரு புறம் நடந்தாலும், ‘அம்மாவை’ பார்க்கிற முயற்சியிலும் அண்ணாச்சி இறங்கியிருக்கிறார் என்பதுதான் நாம் கேள்விப்படுகிற செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக