இந்நிலையில் வீரப்பனின் சமாதியில் சமய சடங்குகள் செய்ய வேண்டுமென கோரி சொந்த ஊரான சேலத்துக்கு வித்யா ராணியை அழைத்துச் சென்றுவிட்டார் முத்துலட்சுமி. அன்றிலிருந்து வித்யா ராணியுடன் தொடர்பில்லை எனவும் எனினும், அவரது தாயார் முத்துலட்சுமி தங்களை பிரித்துவிட்டதாக மரிய தீபக் சென்னை உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.
எனது மனைவியை என்னிடமே ஒப்படைக்க காவற்துறை பரிந்துரைக்க வேண்டும் என தனது மனுவில் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வித்யாராணியை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்
அப்போது, தான் கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என வித்யா தெரிவித்தார். வித்யாராணி மேஜரான பெண் என்பதால், அவர் கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து கணவர் தீபக்குடன் அவர் மீண்டும் ஒன்றிணைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக