இங்கே நீச்சல் தடாகத்தில் பல்டி அடித்து குளிக்கும், நபர் பெயர் டெரிக் ஆர்னல்ட். 1.8 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகளை அரசிடம் இருந்து பெற்று ஏப்பம் விட்டவர். கால்கள் வழங்காது என்று சொல்லி சக்கர நாற்காலியில் சுற்றித் திரிந்து அரசாங்கத்தை ஏமாற்றி ஊனமுற்றோர் நிதியைப் பெற்றுள்ளார். ஊனமுற்றோர் நிதி என்பது அவ்வளவு பெரிய தொகை ஆகாது. அப்படி இருக்க 1.8 மில்லியன் பவுண்டுகளை இவர் எவ்வாறு பெற்றர் என்று கேட்கிறீகளா ? அங்க தான் மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் டெரிக் ! சரி வாருங்கள் மேட்டருக்கு போகலாம் !
நன்றாக நடாக்ககூடிய டெரிக், தான் ஊனமுற்றவர் என்றுசொல்லி சக்கர நாற்காலியில் அலைந்தது போதாது என்று, தன்னைப் போல ஊனமுற்றவர்களுக்கு தாம் உதவுவதாகக் கூறி நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். பலருக்கு சக்கர நாற்காலி, இயந்திர சக்கர நாற்காலி கொடுப்பதாகச் சொல்லி அரசாங்கத்திடம் இருந்து சுமார் 1.8 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றுள்ளார். இவர் காட்டியது அனைத்தும் பொய்கணக்கு. அரசாங்கத்தை சுத்தோ சுத்து என்று சுத்திய இவர் பணத்தில் குழித்தது போதாது என்று பெரும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளார். போதாக்குறைக்கு பல நாடுகளுக்குச் சென்று நீச்சல் குழத்தில் நீத்தியும் உள்ளார்.
உல்லாசமாக இருந்ததுபோக, படங்கள் சிலவற்றை பேஃஸ் புக்கில் ஏற்றியுள்ளார். இதுவே அவருக்கு வினையாகப் போய்விட்டது . பொலிசாரிடம் சிக்கிகொண்டார் டெரிக். பொலிசார் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு 50,000 பவுண்டுகளை பணமாக மீட்டதுபோக, அதி உயர்ரக மதுபானம் மற்றும் வைன் போத்தல்களையும் மீட்டுள்ளனர். நன்றாக நடக்கக்கூடிய மற்றும் நீச்சலடிக்க கூடிய டெரிக் நீதிமன்றம் வரும்போது ஊன்று தடியோடு வந்தது அனைவரையும் சிரிப்புக்கு உள்ளாக்கியது. நீதிமன்றில் இருந்த அனைவரும் ஒருகணம் சிரித்துவிட்டனர். நடிகர் திலகம் சிவாஜிபோல இவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது. ஆனால் நீதிபதி உஷாராகிவிட்டார் !
நீதிமன்றத்துக்குள் ஊன்று கோலோடு வந்தால், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக எடுத்து அதற்கு பிறிதொரு வழக்கு தொடரப்படும் என்று அவர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். இதனை அடுத்து தனது ஊன்று கோலை அப்படியே சுவர் ஒன்றின் மீது சாயவிட்டு விட்டு , நடந்து வந்து அமர்ந்தார் டெரிக். இவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரத்தோடு நிரூபனமாகியது. இதனை அடுத்து 8 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்தார் நீதிபதி. வேறுவழியின்றி எழுந்து நடந்துசென்று பொலிசாரின் வாகனத்தில் ஏறினார் டெரிக் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக