வாத்தின் தலையிலிருந்த நான்கு அங்குல ஆணியை சத்திரசிகிச்சை செய்து அகற்றிய வைத்தியர்கள்!
வாத்து ஒன்றின் மண்டை ஓட்டில் நான்கு அங்குல ஆணியொன்று சிக்கியதால் அதற்கு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆணிகளை ஏற்றப்பயன்படுத்தப்படும் நெயில்கண் என்ற கருவியின் மூலம்தான் இதன் தலையில் ஆணி அடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த டோலி என்ற இந்த வாத்தின் தலையிலிருந்து ஆணியை பலத்த பிரயத்தனத்தின் பின்பே வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.
நான்கு தினங்களுக்குப் பின்பே டோலி ஆபத்தான கட்டத்தைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. தலையில் ஆணியோடு தண்ணீரில் சிரமப்பட்டுக் கொண்டிருந்த இந்த வாத்தை மிருக நலப்பிரிவினர் கண்ட பின்பே இதற்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக