ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

லண்டனில் பழங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள்


லண்டனில் பழங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள்
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள மிகப் பிரபல கட்டிடங்களின் நகல்களை பழங்களைப் பயன்படுத்தி அதே லண்டனில் 2009 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள் கலைஞர் கார்ல் வோர்னரும் அவரது குழுவினரும். இக்கலைத்துவ படைப்பை உருவாக்குகின்றமைக்காக 26 வகையான பழங்கள் மற்றும் மரக் கறிகள் ஆகியவற்றின் பல நூறு துண்டுகளை பயன்படுத்தி இருக்கின்றார்கள்.


மிகவும் கவனமான முறையில் செதுக்கிக் கொண்டார்கள்.

அசலைப் போலவே நகல்கள் அச்சொட்டாக இருக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்து இருந்தார்கள்.

இவ்வேலையை பூர்த்தி செய்கின்றமைக்கு கலைஞர்களுக்கு மூன்று வாரங்கள் எடுத்து இருக்கின்றன.



பார்ப்பவர்களை இவை பிரமிக்க வைக்கின்ற வகையில் தோற்றம் பெற்றன.

பழங்கள், காய்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக இவை உருவாக்கப்பட்டன.

லண்டனுக்கு செல்கின்ற சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்கின்றமைக்காக இத்தகவலை தந்து உள்ளோம்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக