சன்னை நந்தம் பாக்கத்தில் சர்வதேச வர்த்தக மையத்தில் நாளை நடைபெற விருக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. நாம் தமிழர் இயக்கத்தினர் இக்கண்காட்சியில் இலங்கை பொருட்கள் விற்பனைக்க்கோ கண்காட்சிக்கோ வைக்கப்பட்டால் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று அறிவித்திருந்த நிலையில் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கை தயாரிப்புகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்காட்சியில் இடம் பெறாது என்று அறிவித்துள்ளனர்.
இது குறித்து இந்த கண்காட்சி ஒருங்கிணைப்பு அமைப்பான ஜாக் அமைப்பின் நிறுவனர் ஜாகிர் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில்,�ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் சென்னை வர்த்தக மையத்தில் நாளை 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இல்லம் உள்வடிவமைப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியை நடத்த உள்ளோம்.இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களோ அல்லது இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களோ இவை எதுவுமே இடம் பெறவில்லை. இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த பொருளும், தயாரிப்பாளரின் நேர்முகமான அல்லது மறைமுகமான தொடர்பும் இல்லை. எங்களுடைய நிறுவனத்தின் தகவல் ஏடுகளில் காணப்படும் தகவல்கள் ஏதேனும் தமிழர் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்�� என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக