ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவாரூர் அருகே இன்று வழிமறித்து ஸ்டாலின் திடீர் கைது




திருவாரூர்: திருவாரூர் அருகே நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை போலீசார் திடீரென மடக்கி கைது செய்தனர். அவருடன் இருந்த மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மதிவாணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், ஏ.கே.விஜயன் எம்.பி. உள்பட திமுக முன்னணியினரும் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து
திருவாரூரில் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்தார். இதற்காக நேற்றிரவு விமானத்தில் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வந்தார். இரவு தஞ்சையில் தங்கிய ஸ்டாலின், இன்று காலை காரில் புறப்பட்டு திருவாரூர் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், விஜயன் எம்.பி. உள்பட பலர் சென்றனர்.

திருத்துறைப்பூண்டி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. வழியில் ஆலத்தம்பாடி என்ற இடத்தில்  திருவாரூர் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 200 போலீசார் சாலையை மறித்தபடி நின்றிருந்தனர். இதைப் பார்த்ததும் ஸ்டாலின் கார் டிரைவர், வண்டியை அவசரமாக நிறுத்தினார். பின்னால் வந்து கொண்டிருந்த திமுகவினரின் கார்களும் நிறுத்தப்பட்டன. ஸ்டாலின் கார் அருகே வந்த டிஎஸ்பி, ‘திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்யப் போகிறோம்’ என்றார். ‘ஏன் அவரை கைது செய்கிறீர்கள்?’ என்று ஸ்டாலின் கேட்டபோது, ‘பள்ளி மாணவன் விபத்தில் இறந்த வழக்கில் கைது செய்யப் போகிறோம்’ என்றார். ‘கைது வாரன்ட் உள்ளதா?’ என்று ஸ்டாலின் கேட்டதற்கு, போலீசார் ‘இல்லை’ என்றனர்.

‘வாரன்ட் இருந்தால் கைது செய்யுங்கள். நாங்கள் தீவிரவாதிகள் இல்லை. இப்படி காட்டில் வழிமறித்து ஏன் கைது செய்ய வேண்டும். ஏதோ சதிதிட்டம் போல நடக்கிறது’ என்று கூறி போலீசாருடன் ஸ்டாலின் வாக்குவாதம் செய்தார். மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீசார், பூண்டி கலைவாணனை பிடித்து இழுத்து கைது செய்தனர். இதை கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ துரைசந்திரசேகரன் உள்பட 20 பேரையும் கைது செய்வதாக கூறிய போலீசார், அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றினர். இதைப் பார்த்ததும் உடன் வந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசை கண்டித்து கோஷம் போட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருவாரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தெரிந்ததும் திருவாரூர் ஸ்டேஷன் முன்பு திமுகவினர் திரண்டனர். மாவட்டத்தின் பல இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் உருவாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக