ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பேனா பிறந்த விதம்

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா? இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களை உபயோகப்படுத்துகிறோம். ஆனால் ஆரம்பத்தில் அவ்வாறு இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

`லத்தீன்’ மொழியில் `பென்னா‘ என்றால் `பறவையின் இறகு’ என்று பொருள். `பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் `பென்’ என்றும், தமிழில் `பேனா’ என்றும் மாறியது.

ஐந்தாம் நூற்றாண்டில் `இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780-ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார். 1809-ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி `நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.

ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு `நிப்’ செய்தார். `நிப்’பின் முனையில் `இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882-ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு `நிப்’பை கண்டுபிடித்தார்.

1859-ல் முதல்முறையாக `ஊற்றுப் பேனா’ (`பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக